Advertisement

வேலை பார்க்கும் போது தூக்கத்தை தவிர்க்க எளிய வழி

By: Nagaraj Mon, 13 June 2022 11:11:49 AM

வேலை பார்க்கும் போது தூக்கத்தை தவிர்க்க எளிய வழி

சென்னை: வேலை பார்க்கும் போது தூக்கம் வருகிறதா?... பலருக்கு இன்றியமையாத ஒன்று வேலை. பலரும் பல வேலை பார்த்தாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரு ஒற்றுமை வேலை நேரத்தில் வரும் தூக்கம்.

தூக்கம் என்பது இயற்கையானதுதான் என்றாலும் வேலை நேரத்தில் வந்தால் அது பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும். அப்படி வேலை நேரத்தில் வரும் தூக்கத்தை போக்குவதற்கு எளிமையான வழிகள் இருக்கின்றன. ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது இயல்பாகவே சோர்வை உண்டாக்கி தூக்கத்தை வரவழைக்கும். அதனால் சிறிது நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடந்து ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளலாம்.
உணவுகளில் சில உற்சாகத்தை உருவாக்கும். சில உணவுகள் உறக்கத்தை ருவாக்கும். அதனால் உணவில் கவனம் தேவை. உதாரணமாக பொங்கல் போன்ற பருப்பு ஐட்டங்களை தவிர்க்கலாம். அதேபோல் மதிய நேரத்தில் அளவோடு சாப்பிட்டாலும் தூக்கம் வராது. பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்துதான் வேலை பார்க்கின்றனர்.

sleep,coffee,no mistake,work,drink ,தூக்கம், காபி, தவறும் இல்லை, பணி, அருந்தலாம்

எனவே அவர்கள் குறிப்பிட்ட நேரம் தங்களுக்கு பிடித்த பாடலையோ, இசையையோ கேட்கலாம். அப்படி கேட்கும்போது மூளை சுறுசுறுப்படைந்து தூக்கத்திலிருந்து விடுபடுவீர்கள்.

தூக்கத்திலிருந்தும், சோம்பலில் இருந்தும் விடுபடுவதற்கு பலரின் விருப்ப தேர்வாக இருப்பது டீ அல்லது காபி. எனவே எந்த வேலையாக இருந்தாலும் தூக்கம் வரும்போது அதனை ஒத்திவைத்துவிட்டு நேராக கடைக்கோ, காஃபிடேரியாவுக்கோ சென்று ஒரு டீயோ அல்லது காபியோ அருந்தலாம். தூக்கத்தோடு வேலை செய்து சொதப்புவதற்கு 10 நிமிடங்கள் தூக்கத்தை போக்குவதற்காக கழிப்பதில் எந்த தவறும் இல்லை.

Tags :
|
|
|