Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பனிக்காலத்தில் ஏற்படும் சளி பிரச்சனையில் இருந்து தப்பித்து கொள்ள எளிய வழி!

பனிக்காலத்தில் ஏற்படும் சளி பிரச்சனையில் இருந்து தப்பித்து கொள்ள எளிய வழி!

By: Monisha Sat, 12 Dec 2020 09:50:57 AM

பனிக்காலத்தில் ஏற்படும் சளி பிரச்சனையில் இருந்து தப்பித்து கொள்ள எளிய வழி!

பனிக்காலம் வந்தாலே குழந்தைகளுக்கு வறட்டு இருமல், சளி பிரச்சனை ஆகியவை பாடாய் படுத்திவிடும். ஆனால் இந்த பனிக்காலத்தில் இயற்கை முறையில் குழந்தைகளின் சளி பிரச்சனையில் இருந்து தப்பித்து கொள்ளலாம். அது எப்படி என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்!

தேவையானவை
ஏலக்காய்
தேன்

செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 1/4 சிட்டிகை அளவு ஏலக்காய் பொடியை சேர்க்க வேண்டும். ஏலக்காயை மிக்சியில் பொடித்து, பின் அதனை சலித்து எடுத்து வைத்திருக்க வேண்டும்.

winter,cardamom,honey,cold problem,children ,பனிக்காலம்,ஏலக்காய்,தேன்,சளி பிரச்சனை,குழந்தைகள்

இப்போது தேனையும், ஏலக்காய் பொடியையும் நன்றாக கலக்க வேண்டும். இதை தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்கு 3 வேளை வீதம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதை சாப்பிட்டு 10 நிமிடங்கள் கழித்த பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த 10 நிமிடங்களும் நாம் நமது எச்சிலை விழுங்கலாம். அதிலும் நோய் எதிர்ப்புத் தன்மை உள்ளது.

தேன் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால், தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் தொண்டையில் தங்காமல் உடலில் போய் விடும். தேன் தொண்டையில் தங்கினால் தான் தொண்டை கரகரப்பை நீக்கும். ஏலக்காய் சளியை கரைத்து வெளியேற்றும் தன்மைக் கொண்டது.

பொதுவாக தேனில் பல மருத்துவக் குணங்கள் உண்டு. இது நம் உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை அளிக்கும் தன்மைக் கொண்டது. இதிலும் சளி பிடித்த குழந்தைகளுக்கு தொடர்ந்து தேனைக் கொடுக்கும்போது உடலில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். மட்டுமல்லாது தேன் தொண்டைப் புண்களை குணப்படுத்தும்.

Tags :
|
|