Advertisement

உடல் பருமனை குறைக்க மிக எளிய வழிகள் உங்களுக்காக!!!

By: Nagaraj Fri, 28 Aug 2020 08:40:22 AM

உடல் பருமனை குறைக்க மிக எளிய வழிகள் உங்களுக்காக!!!

உடல் பருமனால் அவதிபடுபவர்கள் இன்றைய சூழ்நிலையில் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். சுவையான அதே நேரத்தில் சத்தான உணவு முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் உடலின் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்

வெந்தயக் கீரை சப்பாத்தி:

வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சப்பாத்தி பதத்தில் பிசையவும். இறுதியாக வதக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையை சேர்த்துப் பிசையவும். இதனை வழக்கமான சப்பாத்தி போல போட்டு எடுக்கலாம். வித்தியாசமான நிறத்தில் இருக்கும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

வாழைப்பூ குழம்பு:

வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். அத்துடன் உப்பு தண்ணீர் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குழம்புக்குத் தேவையான அளவு புளிக்கரைசல் தயாரிக்கவும். சீரகத்தை தனியாக நல்லெண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பூண்டு, வரமிளகாய் ஆகியவற்றையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை புளிக் கரைசலில் போட்டு வாழைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். இதுவும் உடல் பருமனை குறைக்க உதவும்.

body weight,simple method,fat soluble,pepper ,உடல் எடை, எளிய முறை, கொழுப்பு கரையும், மிளகு

அன்னாசி பழ பச்சடி:

அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் அன்னாசிப் பழ துண்டுகளையும் சேர்த்து லேசாக வதக்கி கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை சேர்த்து பச்சடி செய்யலாம். இது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து விடும்.

எடை குறைப்புக்கு எளிய வழி

வேளைக்கீரை, குடை மிளகாய், பூண்டு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிக கொழுப்பு குறையும். பூண்டு இரண்டு பல், ஓமம் கால் ஸ்பூன், மிளகு 3 மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.

Tags :