Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பெரியவர் முதல் சிறியவர் விரும்பும் தர்பூசணியில் இவ்வளவு நன்மையா ...

பெரியவர் முதல் சிறியவர் விரும்பும் தர்பூசணியில் இவ்வளவு நன்மையா ...

By: vaithegi Sun, 21 Aug 2022 4:22:56 PM

பெரியவர் முதல் சிறியவர் விரும்பும் தர்பூசணியில் இவ்வளவு நன்மையா ...

தர்பூசணியானது அதிக நீர்சத்து நிறைந்தது. இதில் கொழுப்பு சத்து இல்லை. மேலும், தர்பூசணியில் 90% நீர்சத்து நிறைந்திருக்கிறது.வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்த தர்ப்பூசணியை மிக எளிதாக நமக்குக் கிடைக்கிறது.உடலில் வரும் வேர்க்குரு மீதும் தர்ப்பூசணி நீரை தடவினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த நீர்ச்சத்தானது கோடைகாலத்தில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்கின்றது.சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்க தர்பூசணியில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது. சிறுநீரக பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இதனை தினமும் சாப்பிட்டால் அந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். தர்பூசணியில் இருக்கும் லைகோபீன், சிட்ருலின் போன்ற சத்துக்கள் மிக சிறந்த ஆன்டி-ஆக்சிடண்டுகளாக செயல்படுகின்றன.

மேலும் உயர் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குப்படுத்தவும் தர்பூசணியானது உதவுகின்றது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இரத்த அழுத்த பாதிப்புகளை குறைக்கவும் இது உதவுகின்றது. இதில் இருக்கும் பொட்டாசியம் கர்ப்பகாலத்தில் உண்டாகும் தசை பிடிப்பு பிரச்சினைகளை தடுக்கின்றது.இதில் இருக்கும் லைகோபீன் புற்று நோய் வருவதை தடுக்கின்றது.தர்பூசணியை சாப்பிட்டால் வியர்வை வெளியேறுவது அதிகரிக்கிறது. இதனால் உடலின் அதிகப்படியான சூடு குறைந்து, உடலில் குளிர்ச்சி ஏற்படும். தர்பூசணியில் இருக்கும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகிய இரண்டும் ஆன்டி ஆக்சிடண்ட்களாக செயல்படுகிறன்றன. இவை சருமத்தில் கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதில் உள்ள குளூட்டாதியோன் சரும பராமரிப்புக்கும், நன்றாக முடி வளர்வதற்கும் உதவும்.

watermelon,goodness , தர்பூசணி, நன்மை

அதே சமயம் அன்றாடம் நாம் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்தில் 25% சத்துக்களை தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி கொடுக்கிறது. அதிக நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு தோலில் எரிச்சல், சருமம் கறுத்து போகுதல், உடலில் ஆங்காங்கே தடிப்புகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட கூடும். தர்பூசணியில் இருக்கும் பொட்டாசியம் இந்த பிரச்சினையை தீர்க்கும்.சருமத்தின் பொலிவை தீர்மானிப்பது மெலனின். இது, தர்பூசணியில் குளூட்டாதியோன் ஆன்டி ஆக்சிடன்ட், மெலனின் உற்பத்தியின் அதிகரித்து, சருமத்திற்கு பொலிவை கொடுக்கிறது.கடின உடற்பயிற்சி செய்ப்பவர்கள் பயிற்சி முடித்தவுடன் ஹைரேசனுக்காக எலெக்ட்ரோலைட் சாப்பிடுவார்கள். அதற்கு பதிலாக தர்பூசணி சாப்பிடலாம்.தர்பூசணி கண்பார்வை திறனை அதிகரிக்கின்றது. மேலும் கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை தர்பூசணிப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் ஊக்கப்படுத்தி பார்வை மங்குதல் பிரச்சினையை தீர்க்கின்றது.உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, உடல் சோர்வையும் நீக்குகின்றது.



இது மட்டும் இல்லாமல் உடல் இயக்கத்துக்கு தேவையான தாதுக்கள் இரும்புசத்து, விட்டமின் சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை தர்பூசணியில் அதிக அளவு உள்ளது. சிட்ருலின் என்னும் சத்து தர்பூசணியில் வெண்மை நிற பகுதியில் அதிகம் உள்ளது.நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இதனால் இதய பாதிப்புகள் வராமலும் தடுக்கிறது.உடல் எடை குறைப்பதற்கும் தர்பூசணி உதவுகிறது.பொதுவாக எந்த பழத்தையும், ஜூஸாக அருந்தாமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இதற்கு காரணம் ஜூஸாக்கும் போது பழத்திலுள்ள நார்சத்து குறைந்து விடும்.எனவே இதை சாப்பிட்டு பலன் பெற்று நலமாக இருக்கவேண்டும்.



Tags :