Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றுபவர்கள் செய்யக்கூடாத விஷயங்கள்

வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றுபவர்கள் செய்யக்கூடாத விஷயங்கள்

By: Karunakaran Tue, 22 Sept 2020 7:11:15 PM

வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றுபவர்கள் செய்யக்கூடாத விஷயங்கள்

கொரோனா காரணமாக பல நிறுவனங்கள் ஹொர்க் ஃப்ரம் முறையை இன்றளவும் கடைபிடித்து வருகின்றன. கொரோனா நோய்த் தொற்று மீண்டும் பரவத் தொடங்கிவிடுமோ என இன்னும் சில நிறுவனங்கள் இனி எப்போதுமே வொர்க் ஃப்ரம் ஹோம் முறையையே கடைபிடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளன. வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றுபவர்கள் செய்யக்கூடாத விஷயங்களும் இருக்கின்றன.

லேப்டாப்பை படுக்கையில், மாடிப்படியில், தரையில் போன்றவற்றில் வைத்து வேலை செய்யாதீர்கள். ஏனெனில், ஒருநாள், இருநாள் எனில் இது பரவாயில்லை. நீண்ட நாள்கள் ஓர் ஒழுங்கு தேவை. இல்லையெனில், கழுத்து வலி, இடுப்பு வலி, தலைவலி உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் வரக்கூடும். சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ஜூம் மீட்டிங் அழைப்பிதழ்களைப் பார்ப்பீர்கள். அவற்றில் பலவும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற தலைப்புகளாக இருக்கக்கூடும். ஆனால், வேலை நேரத்தில் இப்படியான ஜூம் மீட்டிங்குகளில் கலந்துகொள்வதைத் தவிருங்கள்.

things,work,home,labtop ,விஷயங்கள், வேலை, வீடு, மடிக்கணினி

24 மணிநேரமும் லேப்டாப்பும் கண்ணுமாக இருக்காதீர்கள். ஆபிஸ் செல்லும்போது கரெக்ட்டாக நேரம் ஒதுக்குவதைப் போல வொர்க் ஃப்ரம் ஹோம் முறையிலும் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுங்கி வேலை பாருங்கள். மற்ற நேரத்தில் குடும்பத்துடன் செலவிடுங்கள். லேப்டாப் எது.. ஸ்நாக்ஸ் பாக்ஸ் எது என்று குழம்பும் விதத்தில் ஸ்நாக்ஸ்க்கு அடிமையாகி விடாதீர்கள். எப்போவது ஸ்நாக்ஸ் என்றால் பிரச்னையில்லை. ஸ்நாக்ஸ் இன்றி வேலை இல்லை என்பது போல அமைத்துக்கொள்ளாதீர்கள்.

எதிர்மறை செய்திகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். சோஷியல் மீடியாவில் அதிகம் உலவும் நபர் எனில், ஏகப்பட்ட செய்திகள் நீங்கள் தேடிச்செல்லாமலே உங்களை வந்தடையும். அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் எல்லோருமே மருத்துவரைப் போல அறிவுரைகளை வழங்கி தள்ளுவார்கள். எதிர்மறை செய்திகளை அதிகம் படித்து மனச் சோர்வு அடைந்துவிடாதீர்கள். ஏனெனில், உங்களின் இயல்பான வேலைகளைப் பார்க்க விடாது அவை செய்துவிடும். மிகுந்த கவனம் தேவை.

Tags :
|
|
|