Advertisement

கைகளை முறையாக பராமரிப்பதில் கவனிக்க வேண்டியவை

By: Karunakaran Thu, 24 Sept 2020 6:31:23 PM

கைகளை முறையாக பராமரிப்பதில் கவனிக்க வேண்டியவை

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள, சீரான இடைவெளியில் கைகளை கழுவுவது அவசியம். அப்படி கைகளை கழுவுவது நோய்களை பரப்பும் வைரஸ் கிருமிகளை அழிப்பதற்கு உதவும். அதேவேளையில் தொடர்ந்து கைகளை கழுவும்போது உள்ளங்கை பகுதி உலர்ந்து போய்விடக்கூடும். கைகளை கழுவியதும் முறையாக பராமரிக்காவிட்டால் மென்மை தன்மையை இழந்துவிடும்.

நிறைய பேர் வெது வெதுப்பான சுடுநீர் கொண்டு கைகளை கழுவினால் கிருமிகள் இறந்துவிடும் என்று கருதுகிறார்கள். அது சரியல்ல.. வெதுவெதுப்பான நீர், கைகளின் உள்ள ஈரப்பதத்தை இழக்க வைத்துவிடும். சாதாரண நீரைக் கொண்டு கைகளை கழுவுவதுதான் நல்லது. கைகளை கழுவுவதற்கு ஈரப்பதத்தை தக்கவைக்கும் தரம் கொண்ட சோப்பை பயன்படுத்துங்கள். இத்தகைய சோப்புகள் கைகளில் எண்ணெய் அல்லது கிரீம் போன்ற நுரைகளை வெளிப்படுத்தி கைகளுக்கு ஈரப்பதத்தையும், மென்மையையும் தரும். ஆனால் சாதாரண சோப்புகள் கைகளை உலரவைத்துவிடும்.

proper,hand care,corona virus,hand wash ,சரியான, கை பராமரிப்பு, கொரோனா வைரஸ், கை கழுவல்

கிளிசரின், லானோலின் போன்றவை ஈரப்பதமூட்டும் தன்மை கொண்ட சோப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய மாஸ்சரைஸிங் சோப் இல்லையென்றால் திரவ வகை சோப்புகளை பயன்படுத்தலாம். கைகளை கழுவிய பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியம். கழுவிய கைகளை துடைத்ததும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தாவிட்டால், உள்ளங்கை பகுதி ஈரப்பதத்தை இழக்க தொடங்கி வறண்டு போய் விடும். கைகளில் ஓரிரு துளிகள் ஊற்றி தேய்த்தாலே உடனே உலர்ந்து ஈரப்பதத்தை தக்கவைக்கும் திரவ நிலை மாஸ்சரைசர்கள் இருக்கின்றன.

சாப்பிடுவதற்கு முன்பு, கழிவறைக்கு சென்றுவந்த பின்பு, மண், தூசுகள் படிந்து கைகள் அழுக்கான பின்பு போன்ற சூழ் நிலைகளில் சானிடைசரை பயன்படுத்துவது சரியாக இருக்காது. அப்போது சோப்பை பயன்படுத்துவதுதான் நல்லது. கைகளை நன்றாக சுத்தமாக கழுவிய பிறகுதான் சானிடைசரை பயன்படுத்தலாம். கைகளை கழுவுவதோடு சரியான முறையில் கைகளை உலர்த்துவதும் முக்கியம். சிலர் கைகளை உலர வைப்பதற்கு ‘ஹேண்ட் டிரையரை’ பயன்படுத்துவார்கள். அதனால் கைகள் விரைவில் உலர்ந்து போய் விடும். கைகள் உலராமல் இருப்பதற்கு அதற்கான கிரீம்களை தடவ வேண்டும்.

Tags :
|