Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உயிரை குடிக்கும் அஜினோமோட்டோ... ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!

உயிரை குடிக்கும் அஜினோமோட்டோ... ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!

By: Monisha Sat, 12 Dec 2020 09:40:41 AM

உயிரை குடிக்கும் அஜினோமோட்டோ... ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!

நாம் சாப்பிடும் ரெடிமேட் உணவுகளில் எல்லாம் கலந்திருக்கும் முக்கியமான ஒரு பொருள் அஜினோமோட்டோ. முன்னதாக இந்த அஜினமோட்டோவை சைனீஸ் உணவுகளில் மட்டுமே கலக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய காலத்தில் அஜினமோட்டோ கலக்காத உணவுகளே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அஜினோ மோட்டோவினால் ஏற்படக் கூடிய சாதாரண பிரச்சனைகளில் ஒன்றாக தலைவலி உள்ளது. இதனுடைய சக்தியானது அடிக்கடி தலைவலியை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்த நிலையை எப்போதும் அனுபவிக்கச் செய்து விடுகிறது.

அஜினோமோட்டோவினால் மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும்.

readymade food,ajinomoto,headache,hypertension,diabetes ,ரெடிமேட் உணவு,அஜினோமோட்டோ,தலைவலி,உயர் இரத்த அழுத்தம்,நீரிழிவு

அஜினோமோட்டோவை உணவில் சேர்த்துக் கொள்வதால் நரம்புகளும் பாதிக்கப்படுகின்றன. முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் மரத்துப் போதல், கூச்சம் அல்லது எரிச்சல் போன்ற உணர்வுகள் வருவதற்கு அஜினமோட்டோ காரணமாக இருக்கும்.

அஜினோமோட்டோவினால் உடற்பருமன், ஆஸ்துமா, ஹார்மோன் சமநிலையற்ற நிலை, மன இறுக்கம், உயர் இரத்த அழுத்தம், அடிவயிற்றில் பிரச்சனைகள், தைராய்டு செயல்பாட்டில் குறைபாடுகள், டை-2 நீரிழிவு நோய், சாப்பாடு அலர்ஜியாதல் மற்றும் கண்களின் விழித்திரை பாதிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

அஜினோமோட்டோ ஆரம்பத்தில் ஒரு வகை கடல் பாசியில் இருந்து தயாரிக்கப்பட்டது. தற்போது கோதுமை, பீட்ரூட், கரும்பு என்று பலவித உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

Tags :