Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலிக்கு சிறந்த தீர்வு இந்த நீர் தான்

சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலிக்கு சிறந்த தீர்வு இந்த நீர் தான்

By: vaithegi Tue, 10 Oct 2023 10:08:48 AM

சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலிக்கு சிறந்த தீர்வு இந்த நீர் தான்

பொதுவாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் .. காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.

இதனை அடுத்து இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது

cold,fever,fatigue,body ache,cold drinking water ,சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி,கபசுரக் குடிநீர்

1.கபசுரக் குடிநீர் என்பது நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும்

2.இந்த ஆரோக்கியம் தரும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி போன்றவற்றை போக்கும் திறன் கொண்டது.

3.இந்த ஆரோக்கியம் தரும் கபசுரக் குடிநீர் நாட்டு மருந்து கடைகளில் இது பொடியாகவும் கிடைக்கும்.

4.நிலவேம்பு கஷாயம் செய்வது போலவே கொதிக்கவைத்து சுண்டிய பிறகு வடிகட்டிக் குடிக்கலாம்.

5.முக்கியமாக கர்ப்பிணிகள் கபசுரக் குடிநீரைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

6.குழந்தைகளுக்கு 15 மில்லி லிட்டர் கபாசுர குடிநீர் கஷாயத்தில் தேன் கலந்து ஒரு ஸ்பூன் தினமும் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

7.பெரியவர்கள் இந்த ஆரோக்கியம் தரும் கபசுரக் குடிநீர் ஒருவேளைக்கு 30 மில்லி குடிக்கலாம்.

8.சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

9.மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே நாம் இதனை பயன்படுத்தி பலன் பெறுவோமாக.


Tags :
|
|