Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்திதான் பாருங்களே...

இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்திதான் பாருங்களே...

By: vaithegi Fri, 12 Aug 2022 11:05:59 PM

இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்திதான் பாருங்களே...

தேன் இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் உணவு பொருள் .இந்த அற்புதமான தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வெகு விரைவாக குடலால் உறிஞ்சப் படுவதால் உடனடி ஆற்றல் கிடைக்கிறது.அதிகாலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் தேனை நாவால் நக்கி சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் வராது.பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி இஞ்சியுடன் தேனில் ஊறவைத்து உட்கொன்று வர நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், ஜீரணப்பாதை சீராகும்.ஒரு தேக்கரண்டி தேனுடன், ஒரு கரண்டி இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, நல்ல ஜீரண சக்தியும், இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் உண்டாகும் மற்றும் நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

மேலும் ஒன்று முதல்மூன்று டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் அல்லது சாப்பாடுக்கு முன் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.தேன் உடல் எடை குறைப்பதில் பயன்படுவதாகும். வெந்நீரில் தேன் கலந்து குடித்து வர கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை வற்றி குறைந்து எடை குறைந்து உடல் உறுதி அடையும்.எலுமிச்சம் பழச்சாறுடன் ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

honey,medicine ,தேன்,மருந்து

இதுமட்டும் இல்லாமல் இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை போன்ற நுரையீரல் சம்பந்தமான பிரச்சினை அகலும்.மேலும் பால் மற்றும் முட்டையுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.மாதுளம் பழ சாற்றுடன் சம அளவு தேன் சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும். பித்தம் தணியும். புதிய இரத்தம் ஊறும். பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் நீங்கும்.

ரோஜாப்பூ இதழ்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணம், மலச்சிக்கல் நீங்கி இரத்த விருத்தி உண்டாகும். கடுக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர பித்தம் தணியும், மலச்சிக்கல் தீரும், மன அழுத்தம் நீங்கி தூக்கத்தை மேம்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு அத்தியாவிஷய ஊட்ட சத்துக்களான வைட்டமின் C , இரும்பு சத்து, கால்சியம் பெறலாம் .எனவே இந்த மருத்துவம் நிறைந்த தேன்னை அருந்தி நலம் பெறுவோம்.

Tags :
|