Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வேலைகளுக்கு நடுவே பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க பெண்களுக்கான டிப்ஸ்

வேலைகளுக்கு நடுவே பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க பெண்களுக்கான டிப்ஸ்

By: Karunakaran Sat, 26 Sept 2020 2:28:39 PM

வேலைகளுக்கு நடுவே பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க பெண்களுக்கான டிப்ஸ்

காலை முதல் இரவு வரை காத்திருக்கும் வேலைகளுக்கு நடுவே பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். வீடு விசாலமாகத் தோற்றமளிக்க வேண்டுமென்றால், வீட்டில் இருக்கும் பொருட்களை நேர்த்தியாக வைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை எக்காரணம் கொண்டும் வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது. பெரிய பெரிய பொருட்களைவிட சின்னச்சின்ன கலைப்படைப்புகளே சிறந்தவை.

சுவர் முழுக்க படங்களாக நிறைக்காமல் மனதை கவரும் ஏதோவொரு ஓவியத்தை மையமாக மாட்டினால் பார்ப்பவர்களை அது கவர்ந்து இழுக்கும். எந்த பொருளை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேதான் வைக்க வேண்டும். குளிர்சாதனப்பெட்டி மீது சீப்பும், தொலைக்காட்சி மீது செல்போனையும் வைப்பது வீட்டு அலங்கார விதிக்கு எதிரானது. எடுத்த பொருளை அதன் இடத்தில் திருப்பி வைத்துவிட்டால் வீட்டை ஒதுங்க வைக்க, ஞாயிற்றுக் கிழமையன்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. அட்டவணை போட்டு வேலை செய்தால், வீடு எப்போதுமே பளிச்சென்று இருக்கும்.

women,maintenance,work,things ,பெண்கள், பராமரிப்பு, வேலை,கலைப்பொருட்கள்

தினசரி வேலைகளை தள்ளிப்போடாமல் இருப்பதே பாதி பராமரிப்புக்கு சமம். தினமும் வீட்டை பெருக்கி துடைக்கும்போதே கையோடு மர அமலாரிகளையும் மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். சமையலறை சாதனங்களை சுத்தப்படுத்துவது, ஒட்டடை அடிப்பது போன்ற வேலைகளை வாரம் ஒருமுறை செய்யலாம். அதிக உடலுழைப்பு தேவைப்படுகிற வேலைகளை, மாதம் ஒருமுறை செய்யலாம். இப்படி தொடர்ந்து செய்வதால், வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது பதறிக்கொண்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது.

செடிகளை பராமரிக்கிற வேலையை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மின் சாதனங்களை கழற்றி சுத்தப்படுத்தும் வேலையை ஆண்கள் செய்யலாம். சுவர்களின் வண்ணங்களே நம் எண்ணங்களை பிரதிபலிக்கும். அதனால் கண்களை உறுத்துகிற அடர் நிறங்களை தவிர்த்து, மனதுக்கு இதம் தரும் வெளிர்நிறங்களை பூசலாம். படுக்கையறைக்கு வெளிர்நீலம் அல்லது இளஞ்சிவப்பு நிறங்களை பரிந்துரைக்கலாம். படுக்கை விரிப்புகளும் அதே நிறங்களில் இருப்பது நல்லது.

Tags :
|
|