Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தோற்றத்தை மாற்றும் அதிகளவு சதை... குறைக்க உதவும் பழங்கள்

தோற்றத்தை மாற்றும் அதிகளவு சதை... குறைக்க உதவும் பழங்கள்

By: Nagaraj Mon, 07 Nov 2022 9:24:52 PM

தோற்றத்தை மாற்றும் அதிகளவு சதை... குறைக்க உதவும் பழங்கள்

சென்னை: வயிற்றிலும் இடுப்பிலும் அதிக அளவு சதை சேரும்போது உங்கள் தோற்றத்தையே அது மாற்றிவிடுகிறது. இதை குறைத்தாலே உங்கள் உடம்பு ஓரளவு கச்சிதமாக இருக்கும். இதை குணப்படுத்த வயிற்று சதையை குறைக்க சில பழங்களை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கொய்யா: இந்த பழத்தை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு நெடுநேரம் பசியிருக்காது. அதுமட்டுமல்லாமல் கொய்யாப்பழத்தில் அதிக அளவு புரதம் இருக்கின்றது.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். இது கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

cut meat,fruits,grapes,figs,guavas ,சதை குறையும், பழங்கள், திராட்சை, அத்திப்பழம், கொய்யா

அத்திப்பழம்: அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இதனை சாப்பிட்டால் வயிறு திருப்தியாக இருக்கும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துள்ளதால் கொழுப்பை கரைக்க இது உதவுகிறது.

சப்போட்டா: உடல் எடையை குறைக்க வேண்டுமானால் முதலில் ஜீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு அதிக அளவு நார்ச்சத்து உள்ள சப்போட்டா பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

திராட்சை: உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள் கருப்பு திராட்சை சாப்பிட்டால் நல்ல கொழுப்பு உற்பத்தி ஆகும். சிவப்பு திராட்சையில் உள்ள எலிஜியாக் அமிலம் கொழுப்பு செல்களை குறிவைத்து, அவை வளருவதை தடுக்கின்றது. இந்த பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்று மட்டும் இடுப்பில் உள்ள சதையை குறையும். கட்டுக்கோப்பான உடலையும் பெறலாம்.

Tags :
|
|
|