Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வலு அளிக்கும் பாரம்பரிய அரிசி வகைகள்

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வலு அளிக்கும் பாரம்பரிய அரிசி வகைகள்

By: Nagaraj Sat, 27 Aug 2022 11:37:34 AM

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வலு அளிக்கும் பாரம்பரிய அரிசி வகைகள்

சென்னை: பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அனைத்தும் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும் தன்மை கொண்டவை.

மாப்பிளை சம்பா: உடலை பலபடுத்தும் மாமருந்து . திருமணத்திற்கு தயாராகும் மணமகன்கள் தொடர்ச்சியாக 41 நாட்கள் இதன் நீராகாரத்தை உண்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

கவுணி அரிசி: புது மாப்பிள்ளைக்கான விருந்துணவு அரிசி. இதன் கஞ்சி குடித்தால் குதிங்கால் வலி நீங்கும் .

சிவப்பு கவுணி அரிசி: புது மண தம்பதியர் உண்ண வேண்டிய அரிசி. இது ஒரு பலகார அரிசி. இட்லி,ஆப்பம், பணியாரம் செய்ய ஏதுவானது . குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் .கருவில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் .

சேலம் சன்னா: கர்ப்பக்காலத்தில் உண்ண வேண்டிய அரிசி. குழந்தை பேரு நன்முறையில் நடக்கும். களைப்பில்லாமல் வேலை செய்ய உதவும். இது நாய் கடி விஷத்தை முறிக்கும் .

பூங்காற் அரிசி: மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி . தாய்பால் சுரக்கும்.


சிங்கினி கார் அரிசி: எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி. உடல் நலம் பெற உதவும் .

இலுப்பைப்பூ சம்பா அரிசி: சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். மூட்டு வலி,பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து . நரம்பு பிரச்சனையின் மருந்து .

rice type,disease resistant,cholera,anna kadi,kriya kothi,blackcurrant ,அரிசி வகை, நோய் எதிர்ப்பு, காலரா, அன்ன காடி, கிரியா ஊக்கி, கருங்குறுவை

காட்டுயானம் அரிசி: இந்த அரிசியில் கஞ்சி வைத்து கறிவேப்பிலை போட்டு மூடி வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் . இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் . இதுவே புற்று நோய்க்கு மருந்தாக இருக்க வேண்டும் என ஆய்வுகள் நடைபெற்று வருகிறது .

பனங்காட்டு குடவாழை அரிசி: தொழிலாளர்களின் தோழன் இந்த அரிசி . அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும் .


கருங்குறுவை அரிசி: இதன் நெல் கரு நிறம். அரிசி செந்நிறம் இது ஒரு மாமருந்து. இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் . அது யானைக்கால் நோய்க்கான மருந்து . குஷ்டதிற்கும் , விஷகடிக்கும் மாமருந்து.


உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது . இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊறவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும் . இதற்கு 'அன்ன காடி 'என்று பெயர் .இது காலராவிற்கான மருந்து . இது கிரியா ஊக்கியாக உள்ளது.

Tags :