Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் திரிபலா

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் திரிபலா

By: Nagaraj Mon, 24 Oct 2022 9:45:50 PM

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் திரிபலா

சென்னை: ரத்த சோகை பாதிப்புக்குள்ளானவர்கள் திரிபலாவை சாப்பிட்டு வரலாம். அதற்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது.

தான்றிக்காய் செரிமானத்தை மேம்படுத்துவதோடு பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக் கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் இது துணைபுரியும்.

கடுக்காய் வயிறு தொடர்பான பல்வேறு உபாதைகளுக்கு நிவாரணியாக செயல்படுகிறது. குறிப்பாக மலச்சிக்கலைத் தீர்க்க பெரிதும் உதவுகிறது.

diseases,many,triphala,diseases,many,triphala ,திரிபலா, தீர்க்கும், நோய், மருத்துவகுணம், நோய் எதிர்ப்பு சக்தி

நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சுவாச பாதையில் படிந்திருக்கும் சளியை நீக்கி நுரையீரல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.

திரிபலாவில் இருக்கும் கசப்பு சுவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து குளுக்கோஸின் அளவை சமநிலைப்படுத்தவும் செய்யும். சைனஸ் பிரச்னையையும் போக்கும். சுவாசக் குழாயிலுள்ள அடைப்பை நீக்கி சீரான சுவாசத்திற்கு வழிவகை செய்யும். சுவாசப் பாதையில் அடைபட்டிருக்கும் சளியை நீக்கும்.

ரத்த சோகை பாதிப்புக்குள்ளானவர்கள் திரிபலாவை சாப்பிட்டு வரலாம். அதற்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது. இதய நோய் வராமல் தற்காத்துக் கொள்ளவும் உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.

Tags :
|
|