Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பல நோய்களுக்கு மருந்தாக இருக்கும் பூண்டு...சாப்பிட்டு பாருங்கள்

பல நோய்களுக்கு மருந்தாக இருக்கும் பூண்டு...சாப்பிட்டு பாருங்கள்

By: vaithegi Sun, 28 Aug 2022 7:29:23 PM

பல நோய்களுக்கு மருந்தாக இருக்கும்  பூண்டு...சாப்பிட்டு பாருங்கள்

சாப்பிடும் உணவு சுவை மிகுந்ததாக இருந்தால் மட்டும் போதாது. அது உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் அளிப்பதாக இருக்க வேண்டும். உணவு சமைக்கும் போது சுவையை அதிகரிக்கவும், உடல் நலம் மேம்படவும் சில பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. அப்படியான ஒரு உணவு பொருள் தான் பூண்டு. பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம். நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயகுழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதிலுள்ள இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளது.

மேலும் வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு உதவும்.பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.ரத்த அழுத்தம் நன்கு ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட நாற்பது வயதை தொடும் காலங்களில் ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

garlic,shakti ,பூண்டு, சக்தி

அதே நேரத்தில் ரத்த அழுத்தத்திற்கு ஆண், பெண் என்ற பேதங்கள் கிடையாது. பூண்டு அல்லில்சிஸ்டின் என்படும் வேதிப்பொருளை தன்னகத்தே அதிகம் கொண்டது. இது ரத்த அழுத்தத்தை சமசீராக வைக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் சிறிதளவு பூண்டு சேர்த்து சமைக்கப்பட்ட உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.நம் இரத்த ட்ரைகிளிசரைடுகள் மற்றும் மொத்த கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும், தமனி பிளேக் உருவாக்கத்தை குறைக்கும் தன்மையும், பூண்டில் அதிகமாக உள்ளது.பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். வயிற்றில் புழுக்கள் இருந்தால், அதனை வெளியேற்ற, தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும்.பூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால், சளி ஏற்படும் எண்ணிக்கைகள் குறைந்துவிடும். அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும்.

இது மட்டும் இல்லாமல் மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும்.
ஒரு நாளைக்கு 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. பச்சையாக பூண்டு சாப்பிடுவது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதுவும் உடலில் கொப்புளங்கள் வருவது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பது, தலை வலி ஏற்படுவது போன்றவை இருந்தால், உடனே பூண்டை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.எலும்புகள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உடலின் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது.



Tags :
|