Advertisement

அமோகமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள்

By: Nagaraj Fri, 28 Oct 2022 10:17:53 PM

அமோகமான  மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள்

சென்னை: புற்றுநோயைக்கூட குணப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு இருக்கிறது. சளித்தொல்லை, மூக்கடைப்பு, ஜலதோஷம் ஏற்பட்டதும் மஞ்சளுடன் சுண்ணாம்பு சேர்த்து ஒரு கரண்டியில் வைத்து லேசாக சூடாக்கி பொறுக்கும் சூட்டில் நெற்றி, மூக்குப்பகுதியில் தடவினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இது எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.

மூக்கடைப்பு, ஜலதோஷம், சளித்தொல்லையின்போது மஞ்சளைத் தீயில் சுட்டு சுவாசித்தால் நல்ல பலன் கிடைக்கும். சாம்பிராணி புகையில் மஞ்சள்தூளைப் போட்டு அதன் புகையை வீடு முழுக்கக் காட்டினால் கிருமிகள், சிறு பூச்சிகள் ஒழியும். பச்சை மஞ்சள் புற்றுநோயை அழிக்கும் தன்மை கொண்டது.

cancer,cold,health,medicine,turmeric ,மஞ்சள், மருத்துவக் குணங்கள்

குறிப்பாக இதிலுள்ள பாலிஃபீனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தும். அதேவேளையில் இதிலுள்ள குர்க்குமின் என்ற ரசாயனப்பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது.


புற்றுநோய் உருவாவதற்குக் காரணமான புண்களை ஆற்றும் சக்தி படைத்தது. நெஞ்சுச்சளியால் அவதிப்படுபவர்கள் பாலுடன் வெள்ளைப்பூண்டு சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். பிறகு மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிவிட்டு அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்றாகக் கடைந்து பனங்கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Tags :
|
|
|