Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கும் உளுத்தம் பருப்பு

இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கும் உளுத்தம் பருப்பு

By: Nagaraj Thu, 23 Mar 2023 10:46:42 PM

இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கும் உளுத்தம் பருப்பு

சென்னை: இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கின்றன... உளுத்தம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளன, அவை நமது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கின்றன.

மேலும் கொழுப்பின் அளவைப் பராமரிப்பதன் மூலமும், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியைத் தடுப்பதன் மூலமும் நமது இதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் பருவத்தில் வாரம் ஒரு முறையாவது உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, பனைவெல்லம் + நெய் கலந்து உருண்டை பிடித்துச் சாப்பிடத் தரவேண்டும். அப்போது இறுக்கமான இடுப்பு அமையும். டீனேஜைத் தாண்டிவிட்ட மற்ற பெண்கள் அடிக்கடி உளுத்தம் கஞ்சி, உளுத்தம் பருப்பு பச்சடி (டாங்கர் பச்சடி) செய்து சாப்பிட, இடுப்பு வலுவாகும்.

kallu soup,urad dal,women,goodness,fat reduction ,கொள்ளு சூப், உளுத்தம்பருப்பு, பெண்கள், நன்மை, கொழுப்பு குறையும்

சில பெண்களுக்கு இடுப்பில் மடிப்பு விழுந்திருக்கும். இவர்கள் வாழைத்தண்டு ஜூஸுக்கு ‘ஹாய் சொல்லி அருந்தினால், இடுப்பு ‘சிக்’ என்று ஆகும். குறிப்பாக பிரசவித்த இளம் பெண்கள், உணவுக்குப் பிறகு நிச்சயம் தாம்பூலம் போட்டுக் கொள்ள வேண்டும். வெற்றிலைப் பாக்கு சாப்பிட்டால், பற்கள் கறையாகிவிடும் என்ற பயமிருந்தால், நான்கு வெற்றிலையை அரைத்து அந்த ஜூஸில், வெல்லப்பாகு சேர்த்து அருந்தலாம்.

இதனால் உடம்புக்குத் தேவையான கால்ஷியம் சேரும். வயிறு உப்புசம் ஏற்படாது. உணவும் செரிமானமாகும். உளுத்தம் பருப்புப்பொடி, பைனாப்பிள் ஜூஸ், ஆலுவெரா ஜெல் இந்த மூன்றையும் தலா இரண்டு டீஸ்பூன் எடுத்து, சந்தனப்பொடி அல்லது செம்மரத்தூள் இரண்டு ஸ்பூன் கலந்து, நீர்விட்டுக் குழைத்து இடுப்பு முழுவதும் தடவிக் குளித்தால் சருமம் பளபளக்கும்.

பருத்த இடுப்பு, பெண்களின் தோற்றத்துக்கே வேட்டு வைத்துவிடும். ஓபிசிடி பிரச்னையால் அவதியுறும் ஐ.டி.பெண்கள் வாரமிருமுறை வெள்ளை முள்ளங்கி + எலுமிச்சைச் சாறு கலந்த ஜூஸ் குடித்தால் கொழுப்பு குறையும். பூண்டு கலந்த கொள்ளு சூப் அல்லது ரசம் இன்னும் பெஸ்ட்!

Tags :
|