Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள் சரியாக ...இதை சாப்பிடுங்கள் !

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள் சரியாக ...இதை சாப்பிடுங்கள் !

By: vaithegi Wed, 24 Aug 2022 9:19:18 PM

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள் சரியாக ...இதை சாப்பிடுங்கள் !

வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.வாழை மரத்தின் எல்லாப்பகுதிகளும் பயனுள்ளவை. வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவை. வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.


வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற, வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம்.வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

uterine disorder,banana flower , கருப்பைக் கோளாறு,வாழைப்பூ

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி, அதனால் வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்றும் வல்லமை, வாழைப் பூவுக்கு உண்டு. செரிமானத்தன்மை அதிகரிக்கும்.மலச்சிக்கலைப் போக்கும், சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் குணம் கிடைக்கும்.வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூல நோய் குணமாகும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் குணமாகும். தாது விருத்தியடையும்.வாழைப்பூவின் நரம்பை நீக்கிவிட்டு, அதை ஒரு பாத்திரத்தில் இட்டு அவித்து, பின்னர் சாறு பிழிந்து, அந்த சாற்றை குடிக்க சீதபேதி, கழிச்சல் போன்றவை குணமாகும்.



உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும்.வாழைப்பூவின் நரம்பை நீக்கிவிட்டு, அதை ஒரு பாத்திரத்தில் இட்டு அவித்து, பின்னர் சாறு பிழிந்து, அந்த சாற்றை குடிக்க சீதபேதி, கழிச்சல் போன்றவை குணமாகும்.எனவே இந்த மருத்துவம் நிறைந்த வாழைப்பூவை சாப்பிட்டு பயன் பெற்று நலத்துடன் வாழவும்.

Tags :