Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கர்ப்பமான ஆறாவது மாதத்தில் பெண்களுக்கு ஏற்படும் மாறுபாடுகள்

கர்ப்பமான ஆறாவது மாதத்தில் பெண்களுக்கு ஏற்படும் மாறுபாடுகள்

By: Karunakaran Wed, 30 Sept 2020 3:28:42 PM

கர்ப்பமான ஆறாவது மாதத்தில் பெண்களுக்கு ஏற்படும் மாறுபாடுகள்

ஆறாம் மாதத்தில் தாய்க்கு அதிகமாக பசிக்கும். சத்துணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். கர்ப்பிணித் தாயின் உடல்எடை அதிகரிக்கும். தசைகள் இறுகி முறுக்கிக்கொள்வதால் அவ்வப்போது உடல் வலி ஏற்படும். தாயின் கால் மற்றும் முகத்தில் வீக்கம் தோன்றும். குழந்தையின் உடலில் கொழுப்பு சேரும். குழந்தை அதிக நேரம் தூங்கும். அது வெளிப்புற சத்தத்தையும் கிரகிக்கத் தொடங்கும்.

வயிற்றின் அடிப்பாகத்தில் லேசான வலி ஏற்படும். கர்ப்பப்பையின் தசைகளின் இணைப்புகள் விரிவாக்கம் பெறுவதால் இந்த வலி தோன்றுகிறது. சிறிது நேரம் ஓய்வெடுத்தால் இந்த வலி நீங்கிவிடும். உடல் எடை கூடுவதால் முதுகுவலி ஏற்படும். நடக்கும்போது குதிகால் செருப்புகளை அணிந்தால் வலி அதிகரிக்கும். அதனால் அவைகளை தவிர்ப்பது நல்லது. மனநிலையில் மகிழ்ச்சிகரமான மாற்றங்கள் உருவாகும். கவலை, குழப்பமான மனநிலை மாறி, தெளிவு பிறக்கும்.

variations,women,sixth month,pregnancy ,மாறுபாடுகள், பெண்கள், ஆறாவது மாதம், கர்ப்பம்

24-வது வாரத்தில் குழந்தையின் கண் இமைகள் திறக்கும். அப்போது குழந்தை 35 செ.மீ. வளர்ச்சி பெற் றிருக்கும். எடை 660 கிராம் இருக்கும். ஆறாவது மாதத்தில் கர்ப்பிணிகள் படுக்கும்போது கால்களுக்கும் தலையணை வைத்துக்கொள்வது நல்லது. அம்மாவின் சத்தத்தையும், வெளியே எழும் குரல்களையும் குழந்தை கிரகிக்கும். பாட்டுகளை நோக்கி கவனம் திசைதிரும்பும். அதனால் இப்போது தாய்மார்கள் வயிற்றுக் குழந்தையோடு பேசத்தொடங்கவேண்டும். குழந்தை, தாயின் குரலுக்கு செவிமடுக்கும்.

தாயின் தொப்புள் வெளியே துருத்திக்கொள்ள ஆரம்பிக்கும். அது இயற்கையானதுதான். பிரசவத்திற்கு பின்பு தொப்புள் வடிவம் இயல்புநிலையை அடைந்துவிடும். ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்காரக்கூடாது. அவ்வப்போது எழுந்து சில நிமிடங்கள் நடந்துவிட்டு மீண்டும் உட்காரவேண்டும். கால்களுக்கு கர்ப்பிணிகள் போது மான அளவு ஓய்வுகொடுக்கவேண்டும். சிலருக்கு ‘வெரிகோஸ்வெய்ன்’ போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பயிற்சியாளரின் உதவியோடு உடற்பயிற்சி, யோகா சனம் போன்றவைகளை மிதமாக செய்யலாம்.

Tags :
|