Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • முதுகு வலியை தணிக்க பல்வேறு வகையான இயற்கை வைத்தியங்கள்

முதுகு வலியை தணிக்க பல்வேறு வகையான இயற்கை வைத்தியங்கள்

By: Nagaraj Sun, 16 Oct 2022 09:41:39 AM

முதுகு வலியை தணிக்க பல்வேறு வகையான இயற்கை வைத்தியங்கள்

சென்னை: முதுகு வலியை சாதாரணமாக எண்ணி புறக்கணிக்க கூடாது, அதற்கு தகுந்த சிகிச்சையை வீட்டிலேயே செய்து பார்க்கலாம், அவ்வாறு செய்தும் வலி குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி ட்ரீட்மெண்ட் எடுப்பது அவசியம்.

உங்கள் முதுகு வலியை தணிக்க பல்வேறு வகையான இயற்கை வைத்தியங்கள் உள்ளன, இது மருந்து உட்கொள்வதைக் குறைத்து அல்லது உங்கள் மருத்துவ சிகிச்சைக்கு கூடுதல் பலனை அளிக்க உதவும்.


முதுகு வலிக்கு தமிழ் மருத்துவத்தில் சிறந்த பலன்களை பெற முடியும். அதற்கு, உணவு கட்டுபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிக எண்ணெயில் வறுத்த தின்பண்டங்கள், அதிக காரம் கொண்ட மசாலா பொருட்கள், அதிக புளிப்பு, கிழங்கு வகைகள், பொறித்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

back pain,advice,health,body,om,kollu ,முதுகு வலி, ஆலோசனை, ஆரோக்கியம், உடல், ஓமம், கொள்ளு

இயற்கை முறைகளில் நாள்பட்ட முதுகு வலிக்கான பயனுள்ள வலி நிவாரண குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உங்கள் முதுகில் கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். பின்னர், வெந்நீரில் குளிக்கவும். ஆமணக்கு எண்ணெயை (விளக்கெண்ணெய்) சூடாக்கி, உங்கள் முதுகில் மசாஜ் செய்யவேண்டும். அதை இரவு முழுவதும் அப்படியே விடவும்.

வீட்டில் தேநீர் தயாரிக்கும் போது இஞ்சியைச் சேர்த்து தயாரிக்கவும், இது முதுகுவலியின் வாய்ப்புகளைக் குறைக்க உதவும். உங்கள் முதுகில் மசாஜ் செய்ய மூலிகை எண்ணெயைப் பயன்படுத்துவதும் விரைவாக முதுகு வலி குணமடைய வழிவகை செய்யும்.

கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும். உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளு தானியத்தை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். இது உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.


அரை கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். பிறகு அவற்றுடன் கற்பூரப் பொடியை சேர்த்து மிதமான சூடாக இருக்கும் போது வலி உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும்.

Tags :
|
|
|
|