Advertisement

பானைபோல் இருக்கும் தொப்பை காணாமல் போக வேண்டுமா?

By: Monisha Wed, 28 Oct 2020 10:51:35 AM

பானைபோல் இருக்கும் தொப்பை காணாமல் போக வேண்டுமா?

இன்றைய காலத்தில் உடல் உழைப்பு இல்லாததால் ஏராளமானோருக்கு தொப்பை வருகிறது. இந்த தொப்பையை குறைக்க பலரும் பலவித முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனாலும் தொப்பையை குறைக்க முடிவதில்லை. இந்த பதிவில் நமது வீட்டில் இருக்க கூடிய ஒரு சில பொருட்களை வைத்தே எளிதில் நமது தொப்பையை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
தேங்காய்ப்பால் – 2 கிளாஸ்
தேங்காய் எண்ணெய் – 1ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
இஞ்சி துருவியது – 1 ஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்

belly,coconut milk,pepper powder,ginger,honey ,தொப்பை,தேங்காய்ப்பால்,மிளகு தூள்,இஞ்சி,தேன்

செய்முறை
முதலில் தேங்காயை துருவி, அதிலிருந்து இரண்டு கிளாஸ் தேங்காய்ப்பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாலுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். இவற்றுடன் துருவி வைத்திருக்கும் இஞ்சியிலிருந்து, ஒரு ஸ்பூன் இஞ்சியை சேர்க்க வேண்டும். பின்னர் மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

எல்லாவற்றையும் சேர்த்தப் பின்னர் இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி லேசாக சூடாக்கி கொள்ளுங்கள். சூடாக்கும் போது குடிக்கிற பதத்திற்கு சூடாக்கி இறக்கி விட வேண்டும். பின் இந்த பானத்தில், சுவைக்காக இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை தினமும் இரவில் குடியுங்கள். இதை தொடர்ந்து தினமும் குடிக்கும் போது, பானைபோல் இருக்கும் தொப்பை காணாமல் போய்விடும்.

இந்த பானமானது, செரிமானத்திற்கும், கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது. இது வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தின் அளவை சீராக்கும். இதனால் வெகு துரிதமாக உணவு செரிக்கப்படும் வாயு பிரச்சினை நீங்குகிறது. இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புகளையும் கரைய செய்யக்கூடியதுமாகும். மேலும் இந்த பானம் கெட்ட கொழுப்புகளை கரைத்து, தொப்பையை குறைக்கிறது. கூடவே உடற்பயிற்சியும் செய்து வாருங்கள்.

Tags :
|
|