Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இளமையான தோற்றம் வேண்டுமா! தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்கள்

இளமையான தோற்றம் வேண்டுமா! தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்கள்

By: Nagaraj Mon, 11 Sept 2023 10:35:15 AM

இளமையான தோற்றம் வேண்டுமா! தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்கள்

சென்னை: இளமை தோற்றத்திற்கு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்... நெல்லிக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன. என்றும் இளமை தோற்றம் நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உண்டு.

இயற்கையின் படைப்பில் காய்களும், கனிகளும் நமக்கு வரப்பிரசாதமாக உள்ளன. இதில் நெல்லிக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன. என்றும் இளமை தோற்றம் நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உண்டு. தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது நெல்லிக்காய்.

இதில் வைட்டமின் சி சத்து என்பது மேனிக்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது. குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். இதயத்தின் செயல்பாடுகள் எப்போதும் சீராக இருக்கின்ற வகையில் உதவக்கூடிய இயற்கை உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடும் போது அதிலுள்ள புளிப்பு தன்மை கொண்ட ரசாயனங்கள், இதயத்தில் ரத்தம் உறைதல், அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது. இதில் உள்ள குரோமியம் சத்து ஆர்த்திராஸ் கிலேரோசிஸ் எனப்படும் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை உண்டாக்காமல் பாதுகாக்கிறது. சிலருக்கு சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

gooseberry,youthful appearance,health,bones ,நெல்லிக்காய், இளமை தோற்றம், ஆரோக்கியம், எலும்புகள்

நீர்ச்சத்து அதிகம் நிறைந்த நெல்லிக்கனி இயற்கையிலேயே ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக இருக்கிறது. மேலும் நெல்லிக்கனியில் இருக்கின்ற சாற்றுக்கு சிறுநீரகங்களில் படிகின்ற சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதை தடுத்து, அவைகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது.

இந்த வைட்டமின் ஏ சத்து நமது கண்களில் விழி படலங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைத்து எதிர்காலங்களில் கண்புரை, கண் அழுத்தம் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் காக்கிறது. இதை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதாவதால் ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள் நீங்கும். கண்பார்வை தெளிவும் ஏற்படுகிறது. எலும்புகள் நம் வாழ்நாளின் இறுதிவரை நமது உடலில் வலுவாக இருக்க வேண்டியது எலும்புகள். நெல்லிக்கனியில் எலும்பின் வளர்ச்சிக்கும், வலுவிற்கும் தேவையான வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம் சத்துகளும் அதிகம் இருக்கின்றன.

எனவே வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நெல்லிக்காய்களை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் வலிமையடைகிறது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நெல்லிக்காய்களை உண்பது அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியமான நிலைக்கு நல்லதாகும். முடிகொட்டுதல் தலைமுடி உடலின் ஆரோக்கியத்தை மட்டும் குறிப்பதில்லை, தலையை வெளிப்புற சூழல்களிலிருந்தும் பாதுகாக்கவும் செய்கிறது.

Tags :
|