Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் எடையை குறைக்க விருப்பமா? அப்போ இதை ட்ரை செய்து பாருங்கள்

உடல் எடையை குறைக்க விருப்பமா? அப்போ இதை ட்ரை செய்து பாருங்கள்

By: Nagaraj Tue, 14 Nov 2023 1:26:25 PM

உடல் எடையை குறைக்க விருப்பமா? அப்போ இதை ட்ரை செய்து பாருங்கள்

சென்னை: உடல் எடையை குறைக்க சமச்சீரான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் காபி குடிக்கும்பொழுது ஒரு சில விஷயங்களை கவனித்துக் கொண்டால், உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது டீ அல்லது காபி குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்தக் கேள்விக்கான விடையை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். காபி அல்லது டீயை சரியான அளவுகளில், சரியான முறையில் தயாரித்து, சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

ஒரு நாளைக்கு 3-4 கப் பால் சேர்த்த டீ அல்லது காபியுடன், ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்களை எடுத்துக் கொண்டால் நிச்சயமாக உடல் எடை அதிகரிக்கும். ஆனால் நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த முறையை பின்பற்றினால், காபி குடித்தாலும் உடல் எடை அதிகரிக்காது. உடல் எடையை குறைக்க உதவும்

சூடான நீருடன் காபி பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இதை காலை, மாலை அல்லது இடைப்பட்ட காலை நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அல்லது சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து இந்த காபியை எடுத்துக் கொள்ளலாம். இதை தூங்குவதற்கு முன் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

lemon juice,coffee powder,hot water,body weight,get benefit ,எலுமிச்சை சாறு, காபி பொடி, சுடுதண்ணீர், உடல் எடை, பயன் பெறுங்கள்

ஏனெனில், இது உங்களுடைய தூக்கத்தை பாதிக்கலாம். இந்த முறையில் காபி போட்டு கொடுத்தால் உடல் எடையை ஈசியாக குறைக்கலாம். எலுமிச்சையில் வைட்டமின் A, C மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. எலுமிச்சை உடல் எடையை குறைக்க உதவும். காபி பொடி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

இது பசி உணர்வைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளலை தடுக்கிறது. காபியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடலின் ஆற்றல் மட்டத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது. உடலின் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். கலோரிகளை எரித்து உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

தேவையான பொருட்கள்எலுமிச்சை - 1/2காபி பொடி - 1 டேபிள் ஸ்பூன்சுடு தண்ணீர் - 1 கப்

செய்முறை: முதலில் ஒரு கப்பில் எலுமிச்சை சாறை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் காபி பொடி மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பரிந்துரை செய்த நேரங்களில் இந்த காபியை குடித்து பயன் பெறுங்கள்.

Tags :