Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இதை செய்தலே போதும்!

மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இதை செய்தலே போதும்!

By: Monisha Mon, 14 Dec 2020 08:43:56 AM

மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இதை செய்தலே போதும்!

ஆரோக்கியமாக வாழ நம் வாழ்க்கை முறையில் மற்ற வேண்டிய சில நல்ல பழக்கவழக்கங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

தினமும் உங்களுக்கு ஆரோக்கியமான நாளாக அமைந்திருக்க காலையில் 5லிருந்து 6 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும். இதை தினமும் மறக்காமல் கடைபிடிக்க வேண்டும். காலையில் சரியான நேரத்தில் சிற்றுண்டி சாப்பிட வேண்டும் இது ஆரோக்கியமாக வாழ முக்கிய குறிப்பு. வேலைக்கு செல்லும் பலர் இந்த காலை உணவை சாப்பிட மறந்துவிடுகிறார்கள். இப்படி நீங்கள் தொடர்ந்து காலை உணவை தவிர்த்து வந்தால் பல நோய்களை சந்திக்க நேரிடும். எனவே, ஒழுங்காக காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிட்டு வாருங்கள்.

அடுத்தாக தண்ணீர், தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பலருக்கும் தண்ணீர் குடிப்பது என்பது பிடிக்காத ஒன்று. நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உங்கள் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.

health,breakfast,water,sunlight,sleep ,ஆரோக்கியம்,சிற்றுண்டி,தண்ணீர்,சூரிய வெளிச்சம்,தூக்கம்

தினமும் ஒரு அரை மணி நேரமாவது சூரிய வெளிச்சம் உங்கள் உடலில் படவேண்டும். அதுவும் காலை சூரிய வெளிச்சம் உங்கள் உடலில் படுவது இன்னும் சிறப்பு. நீங்கள் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் சிறிய அளவில் ஒரு 10 நிமிடமாவது செய்யும் உடற்பயிற்சி உங்களை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

காலையில் இருந்து அடித்து பிடித்து மன அழுத்தத்தோடு அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், மதியம் உணவு உண்ட பிறகு ஒரு 10 நிமிடங்கள் சிறிது கண்களை மூடி சிறிய தூக்கம் போட்டு எழும்பினால், நீங்கள் இரவு தூங்கும் வரை சுறுப்போடு இருப்பீர்கள். இரவு நீங்கள் தூங்க செல்லும் முன்னர் புத்தகம் படிப்பது நல்ல நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும். கூடவே மன அழுத்தத்தை குறைப்பதால் ஆரோக்கியம் கூடும். இரவு 9 லிருந்து 10 மணிக்குள் தூங்குவது உங்கள் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக்கொள்ளும்.

கம்ப்யூட்டர் முன்னர் மணிக்கணக்கில் அப்படியே அமர்ந்து இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மிக வேகமாக பாதிக்கும். அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு 2 நிமிடங்கள் கணினியின் முன்னிருந்து எழுந்து பின்னர் அமர்வது நல்லது.

Tags :
|
|