Advertisement

மன அழுத்தத்தைக் போக்க கூடிய வழிமுறைகள்

By: vaithegi Sat, 18 June 2022 10:06:01 PM

மன அழுத்தத்தைக் போக்க கூடிய வழிமுறைகள்

மன அழுத்தம் (Stress) என்பது மனிதன் அல்லது விலங்கு உயிரினத்தில் உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர்ச் செயலை செய்ய முடியாத நிலை தோன்றுவதன் தொடர்விளைவு அல்லது பின்விளைவாகும்.

மன அழுத்தத்தைக் குறைக்கவும், அதனைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் சில எளிய நடைமுறைகளும், தொடர் பயிற்சிகளும் இருக்கின்றன.

ஒவ்வொரு சூழ்நிலையிலும் மோசமான விஷயத்தைப் பற்றி மட்டுமே நீங்கள் நினைக்கும் போது கவலைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. உங்கள் மனம் அமைதியாக இருக்க உதவும் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்குங்கள்.

தினமும் தியானம் செய்வதன் மூலம் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அது உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாவதிலிருந்து காப்பாற்றும்.

meditation,emotions,stress ,தியானம் , உணர்ச்சிகள்,மன அழுத்தம்

உங்களிடம் இல்லாதவற்றில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இருக்கிற பொருட்களை மதிப்பது முக்கியம். நமக்குக் கிடைத்திருப்பதை நினைத்து நன்றியுடன் இருப்பது நேர்மறையான அணுகுமுறையை வைத்திருக்க உதவுகிறது.

நிறையத் தூங்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் நன்றாக உறங்கும் நாட்களில் உறக்கத்தைக் கண்காணித்துப் பதிவு செய்து கொள்ளவும்.

தவிர்க்கமுடியாத சூழலில் ஏதேனும் மன நெருக்கடிக்கு ஆளாகும்பட்சத்தில், மனதிற்குள்ளாகவே பின்னோக்கி எண்ணுவதைச் செய்யுங்கள். அது அந்த சூழலை அமைதியாக எதிர்கொள்ள உதவும்.

நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. இதன் மூலம் உடலுக்குள் நல்ல ஹார்மோன்கள் சுரக்கிறது. இதுவும் கூட மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும்.

Tags :