Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நாம் அருகம் புல் சாறு குடிப்பதால் பல்வேறு நன்மைகள் பெறலாம்

நாம் அருகம் புல் சாறு குடிப்பதால் பல்வேறு நன்மைகள் பெறலாம்

By: vaithegi Fri, 03 Nov 2023 2:55:06 PM

நாம் அருகம் புல் சாறு குடிப்பதால் பல்வேறு நன்மைகள் பெறலாம்


உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது. ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்.

1. 1 பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது 1 டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

2.அருகம்புல் சாறு குடிப்பதால் அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும்.

advantages,nearby grass ,நன்மைகள் , அருகம் புல்


3.அருகம்புல் சாறு குடிப்பதால் குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

4.அருகம்புல் சாறு குடிப்பதால் சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும்.

5.அருகம்புல் சாறு குடிப்பதால் புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

6.கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) 1 டம்ளர் அளவு குடிக்கவும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது.

7.கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

8. 1 டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும். உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும்.

9.இளநீர் குடிப்பதால் இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும்.

10.இளநீர் குடிப்பதால் குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.




Tags :