Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தொப்பையை குறைக்க இந்த முறையினை நாம் பயன் படுத்தலாம்

தொப்பையை குறைக்க இந்த முறையினை நாம் பயன் படுத்தலாம்

By: vaithegi Sat, 25 Nov 2023 08:19:17 AM

தொப்பையை குறைக்க இந்த முறையினை நாம் பயன் படுத்தலாம்


பொதுவாக தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். இதையடுத்து அதனுடன் உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.

டயட், இன்பினிடி டயட், நடைப்பயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங் போன்ற பலவற்றை மேற்கொள்கின்றனர். இருந்தப் போதும் தொப்பையை குறைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தான் இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எளிமையான உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்களை தினமும் காலையில் மறக்காமல் செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

belly,fat , தொப்பை,கொழுப்பு


1.வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும்.

2.மேலும் வெள்ளரிக்காயில் வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான பொருள் உள்ளது

3.எலுமிச்சையில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

4.மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

5.புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது.

6.மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

7.ஆய்வு ஒன்றில் இஞ்சியை தொடர்ந்து உணவில் சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர் என்று கண்டறிந்துள்ளனர் .

8.இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.

Tags :
|