Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் எடையை குறைக்கும் குடைமிளகாய்..! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!!!

உடல் எடையை குறைக்கும் குடைமிளகாய்..! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!!!

By: Nagaraj Wed, 26 July 2023 06:45:44 AM

உடல் எடையை குறைக்கும் குடைமிளகாய்..! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!!!

சென்னை: உணவில் சில காய்கறிகள் அதிக டேஸ்ட் கொடுக்கும். அந்த வகையில் குடைமிளகாய், சாப்பாட்டில் சேர்த்து கொள்வதால் டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக கிரேவி, தொக்கு போன்றவைகளில் கேப்சிகம் சேர்ப்பது அட்டகாசமான சுவையை கொடுக்கும்.

குடை மிளகாயில் மஞ்சள், சிவப்பு, பச்சை என பல வண்ணங்கள் உள்ளது. பல்வேறு நாடுகளில் குடைமிளகாய் பயன்படுத்தப்படுகிறது. இதில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைவாகவும் உள்ளன. வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ள குடைமிளகாயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

குடைமிளகாயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். எனவே நீங்கள் எடுத்துக் கொள்ளும் சத்தான உணவுகளுடன் குடைமிளகாயையும் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை குறைப்பது மிகவும் சுலபமாகிவிடும். மேலும் இதில் உள்ள வைட்டமின் B6 வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு நன்மை தரும்.

குடைமிளகாயில் உள்ள பண்புகள் கண்பார்வையை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் இதில் நிறைந்துள்ள லூடீன் மற்றும் ஜியாக்சாண்டின் விழித்திரையை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

vitamin,anemia,iron,deficiency,chili ,வைட்டமின், இரத்த சோகை, இரும்புசத்து, குறைபாடு, குடைமிளகாய்

கரோட்டினாய்டு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது கண்களை மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்கும் என ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

சிவப்பு குடைமிளகாயில் உள்ள லைக்கோபின் எனும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. குடைமிளகாய் ஃபோலேட் மற்றும் வைட்டமின் B6 இன் சிறந்த ஆதாரம் ஆகும். இதில் ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ஸ்களும் உள்ளன. இவை இதய நோய்களின் ஆபத்தை கணிசமாக குறைக்கின்றன.

உடலின் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு வைட்டமின் C மிகவும் அவசியமானது. உங்களுடைய தினசரி வைட்டமின் C தேவையை பூர்த்தி செய்ய குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது இரத்த சோகை அல்லது உடலில் இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

Tags :
|
|