Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பாலில் மஞ்சள்தூள் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

பாலில் மஞ்சள்தூள் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

By: Nagaraj Fri, 24 Mar 2023 10:54:52 PM

பாலில் மஞ்சள்தூள் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

சென்னை: பாலில் மஞ்சள்தூள் கலந்து குடித்தால் என்னென்ன நன்மை ஏற்படும் என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள். உப்பும், மஞ்சளும் கெட்ட பாக்டீரியாவைக் கொல்லும் ஆற்றல் படைத்தவை. இதனால்தான் இறைச்சிகள், சில காய்கறிகளை மஞ்சள், உப்பு சேர்த்து கழுவுகின்றனர்.

கெட்ட பாக்டீரியாக்கள் கொல்லப்படும் நிலையில் உடலில் ஏற்படும் நோய்த்தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.கிராமங்களில் வீடு முற்றங்களில் சாணத்துடன் மஞ்சளை சேர்த்து தெளித்து விடுவார்கள். இதுவும் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகள் நம் பாதத்தில் தொற்றிக் கொண்டு வீட்டுக்குள் வந்துவிடாமல் தடுப்பதற்குத்தான்.

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை ஆங்கிலத்தில் அழகாக கோல்டன் மில்க் என்று அழைப்பார்கள். பெயரில் மட்டுமல்ல உண்மையில் நம் ஆரோக்கியத்துக்கு ஏற்ற கோல்டன் பால் தான் அது.

turmeric,milk,benefits,sugar level,fighting ,மஞ்சள், பால், நன்மைகள், சர்க்கரை அளவு, போராடும்

நச்சு நீக்கியாக இருக்கும் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் பல வகையான நன்மைகள் உள்ளன. அதனால் தான் ஜப்பானில் இன்று வரையிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அதில் மிக முக்கிய நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் : நோய்களைத் தவிர்க்க நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இருமல், சளி போன்ற நேரத்தில் மஞ்சள் கலந்த பால் குடிப்பது மிகவும் நல்லது. உடல் ஏதேனும் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தலும் மஞ்சள் பால் குடிக்கும் போது அதை எதிர்த்துப் போராடும்.

நீரிழிவு நோயை தடுக்கும்: மஞ்சளில் நீரிழுவு நோயை எதிர்த்துப் போராடக் கூடிய குர்கியூமின் என்ற ஆற்றல் பொருள் உள்ளது என ஆய்வில் கண்டரியப் பட்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து சீராக வைக்கும்.

Tags :
|