Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?

By: Karunakaran Sat, 07 Nov 2020 12:56:29 PM

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்று கூறுவர். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவுக்கு வைட்டமின்கள், புரோட்டீன்கள் என உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆப்பிளில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொழுப்பானது கரைந்துவிடும்.

இதில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்களை அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. ஆப்பிளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்தானது, பெருங்குடலில் புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கும்.

eating,apple,health,blood ,உண்ணுதல், ஆப்பிள், ஆரோக்கியம், இரத்தம்

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால், அவை சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆப்பிள் மற்றும் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளலாம். ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால், அவை உடலை கட்டழகுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலிபீனால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்.

Tags :
|
|
|