Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • எந்த படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் கிடைக்கும்

எந்த படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் கிடைக்கும்

By: Nagaraj Tue, 03 Oct 2023 11:16:52 AM

எந்த படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் கிடைக்கும்

சென்னை: படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்

கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.கோரைப்பாய் – உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.பிரம்பு பாய் – சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.ஈச்சம்பாய் – வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

mattresses,free fluff,diseases,relief,sleep ,பாய்கள், இலவம் பஞ்சு, நோய்கள், நிவாரணம், உறக்கம்

மூங்கில் பாய் – உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் – வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய் – வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை: உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
இரத்தினக் கம்பளம் – நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில்சரக்குகள் கையாள பயன்படும். மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர் மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும். நாணல்கோரை பாய் மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படுகிறது.

Tags :
|