Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பெண்களுக்கு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட காரணங்கள் என்ன ?

பெண்களுக்கு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட காரணங்கள் என்ன ?

By: Karunakaran Mon, 21 Sept 2020 7:56:50 PM

பெண்களுக்கு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட காரணங்கள் என்ன ?

முன் நெற்றியில், கொத்து கொத்தாக முடி உதிர்வு உண்டாகும் போது பெண்களுக்கு அது வழுக்கையாகத்தான் கணக்கில் கொள்ளப்படும். முடி உதிர்வும் கவனிக்காத போது முடி வழுக்கையுமாய் பலவிதமான பிரச்சனைகளை இவை கொண்டுவந்து விடுகிறது. பெண் பிள்ளைகள் சிறுவயது முதலே சீரான சமச்சீரான உணவு எடுத்துகொண்டாலும் கூட பூப்படையும் காலத்தில் உண்டாகும் ஹார்மோன் சுரப்பு பாதிக்காமல் உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் ஆரோக்கியமாக இருந்துவிட்டால் அவை உடலையும் கூந்தலையும் பாதிக்காது.

ஆரோக்கியமாக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கே பூப்படைந்த காலத்தில் ஹார்மோன் சுரப்பில் முடி கொட்டுவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிலும் குறைபாடு ஊக்குவிக்கும் வகையில் இருந்தால் இவை தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும். அதனாலும் முடி கொட்டுவது தீவிரமாகி இளவயதில் வழுக்கை உண்டாகலாம். பெண்களுக்கு பூப்படைந்த காலத்துக்கு பிறகு ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாவது போன்றே கர்ப்பக்காலத்திலும் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் உண்டாகும். இது கர்ப்பக்காலம் தொடங்கி பேறுகாலம் வரையிலும் இந்த ஹார்மோன் சமநிலையின்மை இருக்கும்.

hair loss,baldness,women,hormones ,முடி உதிர்தல், வழுக்கை, பெண்கள், ஹார்மோன்கள்

பிரசவக்காலத்துக்கு பிறகு உடல் உள்ளுறூப்புகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை ஹார்மோன் சீரான சுரப்பு உண்டாகும் வரை அவை முடி உதிர்வை உண்டாக்க கூடும். இதை தவிர்க்க முயாலாத அளவுக்கு உடல் பலவீனமாகும் போதும் வழுக்கை உண்டாக வாய்ப்புண்டு. சில பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை பாதிப்பு நேரும் போது அவை பெருமளவு முடி உதிர்வை உண்டாக்கிவிடக்கூடும். தைராய்டு இல்லாத நிலையில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருந்தாலோ அல்லது கருப்பையில் ஓவரியை சுற்றி ஏற்படும் சில குறைபாடுகளாலோ உண்டாகக்கூடிய பாதிப்புகளில் முடி உதிர்வும் ஒன்று.

உடல் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்து குறையாமல் இருக்க வேண்டும் என்பது போன்று கூந்தல் பிரச்சனைக்கும் ஊட்டச்சத்து தேவை உடலில் இந்த சத்துகள் பற்றாக்குறையாக இருக்கும் போது அவை கூந்தலிலும் பிரதிபலிக்கும். குறிப்பாக பெண்களுக்கு அதிக குறைபாடு கால்சியமும் அதைதொடர்ந்து இரும்புச்சத்தும் தான். பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகம் குறைவாக இருந்தால் அவை நிச்சயம் முடி உதிர்வை உண்டாக்கி தீவிரமாகும் போது வழுக்கை பிரச்சனையை உண்டாக்கும்.

Tags :
|