Advertisement

வெளிச்சத்தில் உறங்கினால் என்ன விளைவுகள்..

By: Monisha Sun, 10 July 2022 7:45:13 PM

வெளிச்சத்தில் உறங்கினால் என்ன விளைவுகள்..

தூங்கும் போது வெளிச்சத்தில் தூங்கவே கூடாது என்கிறது ஆய்வுகள்.சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி ஃபெயின்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசன் நடத்திய ஆய்வின் படி, தூக்கத்தின் போது ஒளி வெளிப்பாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் உடல் நல அபாயங்கள் குறித்து கூறியுள்ளது.

இன்றைய நாகரீக உலகில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் தொலைக்காட்சி பயன்பாடுகள் என்பது அதிகமாக உள்ளது. ஒரு நாளில் 24 மணி நேரமும் செயற்கை ஒளி மூலங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம்.

health,sleep,light,effects ,தூக்கம், வெளிச்சம், விளைவு,ஒளி,

அதிக வெளிச்சத்தில் தூங்கும் போது உறக்கத்தின் போது இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்த குளுக்கோஸ் அதிகரித்தல் போன்றவை உண்டாகிறது.

ஒளி நம்முடைய தன்னியக்க நரம்பு மண்டலத்தை தூண்டி ஆரோக்கியமான நிம்மதியான தூக்கத்தின் போது அதை பாதிக்க செய்கிறது. இதனால் உங்கள் தூக்கம் கெட ஆரம்பிக்கும்.எனவே இரவில் தூங்கும் போது முடிந்த வரை எந்தவொரு வெளிச்சமும் இல்லாமல் அல்லது குறைந்த வெளிச்சத்தில் தூங்க முற்படுங்கள் என்று இந்த ஆய்வு ஊக்குவிக்கிறது.

Tags :
|
|
|