Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆப்பிளைத் தினமும் சாப்பிட்டால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள்

ஆப்பிளைத் தினமும் சாப்பிட்டால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள்

By: vaithegi Tue, 08 Nov 2022 7:13:49 PM

ஆப்பிளைத் தினமும் சாப்பிட்டால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்றாக உள்ளது ஆப்பிள். இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளதால்இதய நோய், நீரழிவு நோய் பிரச்சனைப் போன்ற பல வகையான நோய்களுக்குத் தீர்வு காண முடியும். இதனால் தான் குக்கீஸ்கள், மஃபின்கள், ஜாம், சாலடுகள், ஓட்ஸ் மற்றும் ஸ்மூத்திகள் போன்றவற்றிற்கு ஆப்பிள் பழங்களை அதிகளவில் இன்றைக்குப் பயன்படுத்துகிறோம்.

செரிமான பிரச்சனைக்குத் தீர்வு: ஆப்பிளில் ஃபைபர் பெக்டின் அதிகளவில் உள்ளது. பெக்டின் என்பது ஒருவகை கரையக்கூடிய நார்ச்சத்து என்பதால் குடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சி ஜெல்லை உருவாக்குகிறது. எனவே நீங்கள் தினமும் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளும் போது செரிமானப் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

apple,benefits ,ஆப்பிள்,நன்மைகள்

எடை இழப்பிற்கு உதவுகிறது :ஆப்பிளில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் உடல் எடையைக் குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிள் சாலட், ஜூஸ் அல்லது ஆப்பிள் பழங்களை அப்படியே சாப்பிடும் போது, பசி அதிகளவில் எடுக்காது. எனவே தேவையில்லாத ஸ்நாக்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும்.

நீரழிவு பிரச்சனைக்குத் தீர்வு: ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்களின் சேதத்தைப் பாதுகாக்கிறது. எனவே ஒரு நாளைக்கு 1-2 ஆப்பிள்களைச் சாப்பிட்டு வரும் போது டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 28 சதவீதம் குறைவாக இருப்பதோடு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

தினமும் ஆப்பிளை நாம் சாப்பிட்டு வந்தால் மூளை ஆரோக்கியம், முகப்பருக்களை தடுத்தல், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுச்சேர்க்கவும் உதவியாக உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் மறக்காமல் தினமும் ஒரு ஆப்பிளாவது சாப்பிடுவதை மறந்துவிடாதீர்கள்.

Tags :
|