Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தலைவலி உடனே தீர வீட்டில் என்ன செய்யலாம்? வாங்க பார்ப்போம்

தலைவலி உடனே தீர வீட்டில் என்ன செய்யலாம்? வாங்க பார்ப்போம்

By: vaithegi Wed, 26 July 2023 3:52:29 PM

தலைவலி உடனே தீர வீட்டில் என்ன செய்யலாம்? வாங்க பார்ப்போம்

தலைவலி என்பது எப்பொழுது வரும் என்றே தெரியாத ஒரு விஷயமாக இருக்கும். அது வந்து விட்டால் அவ்வளவு சீக்கிரம் போய்விடவும் செய்யாது. உடம்பில் டீஹைட்ரேஷன் எனப்படும் நீர் சத்து குறைவதாலும் தலைவலி வருகிறது. தீராத தலைவலிக்கு வீட்டிலேயே சட்டுன்னு செய்யக்கூடிய விஷயம் பற்றி இங்கே பார்ப்போம்

தலைவலி தீருவதற்கு முதலில் தண்ணீர் பருக வேண்டும். உடம்பில் நீர் சத்து குறைவதால் தலைவலி உண்டாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. குடிக்கும் தண்ணீரை ஒரேயடியாக மடக்கு மடக்கு என்று குடிக்காமல் வாயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சிப் செய்து குடிக்க வேண்டும். தீராத தலைவலி தீருவதற்கு இந்த முறையை செய்து பாருங்கள் சட்டென்று வலி குறைந்து போவதை உணரலாம்.

headache,dehydration ,தலைவலி ,டீஹைட்ரேஷன்

தீராத ஒற்றை தலைவலி அல்லது கடுமையான தலைவலி உடனே நிவாரணம் காண்பதற்கு ஒரு கிராம்பை எடுத்து அடுப்பில் காண்பித்து சூடு செய்து கொள்ளுங்கள். சற்று ஆறியதும் ஒரு துணியில் மடித்து அந்த புகையை சுவாசித்து உள் இழுக்க வேண்டும். இப்படி செய்தால் ஒரே நிமிடத்தில் கடுமையான தலைவலி குறைவதை உணரலாம்.

தலைவலி வந்தால் சுக்கை உரலில் தேய்த்து அதை எடுத்து நெற்றியில் பற்று போடுவார்கள். சுருக் சுருக் என்று எரிய ஆரம்பிக்கும் கொஞ்ச நேரத்திலேயே தலைவலி தீரும். இது அந்த காலத்தில் இருந்து பாட்டிமார்கள் செய்து வருவது ஆகும். அதே போல கொஞ்சம் இஞ்சியை வாயில் போட்டு சுவைத்து மெல்ல வேண்டும். அதன் சாறு உள்ளிறங்க தீராத தலைவலி உடனே தீரும்.

headache,dehydration ,தலைவலி ,டீஹைட்ரேஷன்

பிளாக் டீ எனப்படும் பால் சேர்க்காத டீயில் நான்கைந்து புதினா இலைகளை போட்டு கொதிக்க வையுங்கள். பிறகு மிதமான சூட்டில் இதை கொஞ்சம் கொஞ்சமாக சிப் செய்து பருகினால் உச்சந்தலையில் இருக்கும் பாரம் இறங்குவதை நீங்களே கண்கூடாக உணர முடியும். புதினா இலைகளை போலவே பிளாக் டீயில் நான்கைந்து துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து பருகினாலும் தலைவலி தீரும்.

உங்கள் வீட்டில் ஆப்பிள் இருந்தால் அதை பிரஷ்சாக சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெட்டிய ஆப்பிளின் மீது கொஞ்சம் உப்பை தடவி கொள்ளுங்கள்.அதன் பின்னர் அந்த ஆப்பிளை நன்கு மென்று கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டாலும் தலையில் இருக்கக்கூடிய பாரம் இறங்கி தலைவலியானது உடனே தீரும். இப்படி எளிதான முறையில் தலைவலியை விரட்டியடிக்க முயற்சி செய்து பாருங்க.

Tags :