Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நோய்களுக்கு காரணமாகும் உடல் சூட்டை குறைக்க என்ன செய்யலாம்?

நோய்களுக்கு காரணமாகும் உடல் சூட்டை குறைக்க என்ன செய்யலாம்?

By: Monisha Thu, 05 Nov 2020 11:53:30 AM

நோய்களுக்கு காரணமாகும் உடல் சூட்டை குறைக்க என்ன செய்யலாம்?

உடல் உஷ்ணம் என்பது நமது உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கு முக்கிய சக்தியாக உடல் வெப்பம் அமைகிறது. அதே நேரத்தில் உங்களுடைய உடல் சூடு அதிகமானால் பல்வேறு நோய்கள் வந்துவிடும். எனவே உடல் உஷ்ணத்தை சமநிலையில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் உடல் சூட்டை குறைக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

வெந்தயம்
உடல் சூடு அதிகமானால் மற்றும் உடலின் உள் சூட்டை குறைக்க வெந்தயத்தை இரவு ஊற வைத்து அதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வெந்தயம் ஊற வைத்த நீரையும் குடிக்க வேண்டும்.

நல்லெண்ணெய்
உடல் சூடு அதிகமானால் நீங்கள் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் 2 பல் பூண்டு, 5 மிளகு சேர்த்து சூடாக்கி இளம் சூட்டில் கால் நகக்கண், உள்ளங்கால், தொப்புள் ஆகியவற்றில் தடவினால் 5 நிமிடத்தில் பலன் கிடைக்கும். உடல் சூடு அதிகமானால் நீங்கள் உங்களுடைய உடலில் தினமும் உடல் முழுவதும் நல்லெண்ணெய் லேசாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் உடல் சூடு குறையும்.

disease,body heat,dill,sesame oil,hydration ,நோய்,உடல் உஷ்ணம்,வெந்தயம்,நல்லெண்ணெய்,நீர்சத்து

எண்ணெய் குளியல்
எண்ணெய் குளியல் மூலம் உங்களுடைய உடல் சூட்டை குறைக்கலாம். வெதுவெதுப்பான குளியல் நீர் உங்களுடைய உடல் உஷ்ணத்தை மிக வேகமாக குறைக்கும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளியுங்கள்.

நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள்
உடலுக்கு குளிர்ச்சியை தரும் வெள்ளரிக்காய், வெண்பூசணி, புடங்காய், முள்ளங்கி, இளநீர் போன்ற அதிக நீர்சத்து நிறைந்த இயற்கையை காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். அதோடு கூட சாத்துக்குடி, ஆரஞ்சு, கிவி, லெமன், கொய்யா, கிரேப்ஸ் போன்ற சிட்ரஸ் பழங்களை அதிக அளவில் சாப்பிட்டு வரும் பொழுது உங்களுடைய உடல் சூடு குறைந்து உடல் வெப்பநிலை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம்.

Tags :
|