Advertisement

உடல் எடை குறைக்க என்னென்ன உணவுகளை சாப்பிட்டலாம்??

By: Monisha Thu, 09 July 2020 3:19:06 PM

உடல் எடை குறைக்க என்னென்ன உணவுகளை சாப்பிட்டலாம்??

உடல் எடை சீரான அளவில் இருப்பது மிக மிக முக்கியமானது. அதாவது ஒரு மனிதன் தன் உயரத்திற்கு ஏற்ற சராசரி எடையில் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த அளவுகோலை தாண்டி உடல் எடை இருப்பது பல்வேறு விதமான ஆபத்துகளை ஏற்படுத்தி விடும். அதிக அளவு உடல் எடை பல்வேறு வகையான நோய்களுக்கு அழைப்பு விடுக்கும். என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதை பார்க்கலாம்?

பெர்ரி பழங்களில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இவை உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டன. ஆக உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் உள்ளவர்கள் இந்த பழங்களை சாப்பிட உகந்தது.

தினமும் கிரீன் டீ தயாரித்து பருகலாம். இந்த கிரீன் டீ அதிக அளவு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். அதுமட்டுமல்லாமல் கிரீன் டீ அருந்துவதால் பல்வேறு கூடுதலாக ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.

body weight,berries,green tea,greens,water ,உடல் எடை,பெர்ரி பழங்கள்,கிரீன் டீ,கீரைகள்,தண்ணீர்

பொதுவாக உடல் எடை குறைப்பதில் கவனம் செலுத்துபவர்கள் நார்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்வது நல்லது. அந்த வகையில் எல்லா கீரைகளும் சாப்பிட உகந்தது தான். இருப்பினும் பசலைக்கீரையை குறிப்பிட்டு கூறலாம். பசலைக்கீரையில் கொழுப்பு சத்து கிடையாது. பசலைக்கீரை பல்வேறு நன்மைகளை தருகிறது. கலோரிகளின் அளவு குறைவாகவே இருக்கும். கூடுதலாக இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஆக உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பசலைக்கீரையில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடையை குறைப்பதில் எலுமிச்சை பழம் மிகவும் உதவும் சற்று மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வர உடலில் சேர்ந்து கொழுப்புகள் அனைத்தும் கரையத் தொடங்கும். மேலும் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் கழிவுகள் நீங்கிவிடும். இது ஒரு எளிமையான மற்றும் நல்ல பலன் தரக்கூடிய வழியாகும்.

body weight,berries,green tea,greens,water ,உடல் எடை,பெர்ரி பழங்கள்,கிரீன் டீ,கீரைகள்,தண்ணீர்

உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை அற்புதமான வகையில் உதவுகின்றது. கறிவேப்பிலை உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. ஆக இதை பொடியாக செய்து சாப்பாட்டில் கலந்து சாப்பிடலாம். அல்லது இலைகளை ஒதுக்காமல் மென்று சாப்பிடுவது உகந்தது. இது தொடர்ந்து செய்யும் பொழுது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல பச்சை கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் விரைவிலேயே பலனை பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்துவிட்டால் அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு மற்றும் நச்சுகளை அகற்ற அற்புதமான வழியில் துணைபுரியும்.

காய்கறி மற்றும் கீரை சூப்-களை சமைத்து சாப்பிடுவது உகந்தது. இந்த சூப் வகைகளில் தேவையான அளவு மிளகு சேர்க்க வேண்டும். கொழுப்பை கரைக்கும் ஆற்றல் மிளகில் அதிக அளவு உள்ளது.

Tags :
|