Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் என்றால் என்ன? அதில் என்னென்ன பயன்கள்?

வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் என்றால் என்ன? அதில் என்னென்ன பயன்கள்?

By: Monisha Fri, 04 Sept 2020 11:22:10 AM

வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் என்றால் என்ன? அதில் என்னென்ன பயன்கள்?

வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் என்பது எட்டு வைட்டமின்களின் தொகுப்பு. ஒவ்வொரு வைட்டமினுக்கும் உடலைக் கட்டுப்படுத்தும் பல்வேறு வேலைகள் இருக்கின்றன. இதனால் ஒன்று குறைந்தாலும் சமநிலை இழப்பு ஏற்படும். மேலும் பி வைட்டமின்கள் நீரில் கரையக் கூடியவை. அதாவது உடலில் அவற்றை சேகரித்து வைக்க முடியாது. இதனால் வைட்டமின் பி பொருள்களை தினசரி சாப்பிட வேண்டியது ரொம்ப அவசியம்.

உங்கள் தோலையும் கூந்தலையும் ஆரோக்கியத்துடன் வைப்பதற்கு இந்த வைட்டமின்கள் மிகவும் முக்கியமானவை. உடலின் செல்களைப் பராமரிப்பதற்கான ஆற்றலைத் தருவதற்குத் தேவையான கலோரிகளைப் பெற பி வைட்டமின்கள் உதவுகின்றன. இறந்த செல்களை மாற்றுவது, சருமத்தை இளமையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும் எண்ணெயை உற்பத்தி செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்கள் உதவுகின்றன.

வைட்டமின் பி1 (தயமின்): இது ஆக்ஸிஜனேற்றத்தை தடுத்து சமநிலைப் படுத்துகிறது. சிறுவயதிலேயே முதிர்ந்த தோற்றம் அடைவது தடுக்கப்படும். இது சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், ஓட்மீல், சோயா பீன்ஸ், முந்திரி ஆகியவற்றில் எதில் கிடைக்கிறது.

vitamin b,skin,antioxidants,metabolism,health ,வைட்டமின் பி,தோல்,ஆக்ஸிஜனேற்றம்,மெட்டபாலிசம்,ஆரோக்கியம்

வைட்டமின் பி2 (ரிபோ ஃபிளேவின்): உடலின் மெட்டபாலிக் செயல்பாடு களுக்கு இது அவசியம். தோலில் உள்ள செல்கள் உட்பட, உடலின் எல்லா செல்களும் இதனால் புதுப்பிக்கப்படும். இது பால், முட்டைகள், இறைச்சி, கல்லீரல், தானியங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றில் எதில் கிடைக்கிறது.

வைட்டமின் பி3 (நியாசின்): செல் மெட்டபாலிசம், கார்போ ஹைட்ரேட் கிரகிப்புக்கு இது அவசியம். இதனால் ஆற்றல் கிடைப்பதோடு, இறந்த செல்கள் அழிக்கப்பட்டு புதிய செல்களும் உருவாகும். இது மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசி ஆகியவற்றில் எதில் கிடைக்கிறது.

வைட்டமின் பி5 (பான்டோ தெனிக் அமிலம்): இது அழற்சியைத் தடுக்கும், கொழுப்பு உடைதலை வேகமாக்கி, பருக்கள் உருவாவதைத் தடுக்கும். இது மக்கா சோளம், முட்டை, சீஸ், இறைச்சி, பிராக்கோலி, தக்காளி ஆகியவற்றில் எதில் கிடைக்கிறது.

வைட்டமின் பி6 (பைரிடாக்சின்): தோலின் எண்ணெய் பசை மிக்க பகுதிகளில் செதில் உரியும் நோயை சரிசெய்ய உதவுகிறது. இது முழு தானியங்கள், கல்லீரல், பயறுகள், வாழைப்பழம் ஆகியவற்றில் எதில் கிடைக்கிறது.

vitamin b,skin,antioxidants,metabolism,health ,வைட்டமின் பி,தோல்,ஆக்ஸிஜனேற்றம்,மெட்டபாலிசம்,ஆரோக்கியம்

வைட்டமின் பி7 (பயோ டின்): கூந்தல் வளர்ச் சிக்கான வைட்டமின். வைட்டமின் ஹெச் எனப்படும் இது சருமம், நகங்கள், கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது பயறு வகைகள், பழங்கள், காய் கறிகள், முட்டைகள், சீஸ் ஆகியவற்றில் எதில் கிடைக்கிறது.

வைட்டமின் பி9 (ஃபோலிக் அமிலம்): ரத்த சிவப்பு அணுக்கள் உருவாகி, முதிர்வடைந்து, பெருகுவதற்கு இது அவ சியம். சருமம், கூந்தலின் ஆரோக்கியத்துக்கும் முக்கியம், இளநரையைத் தடுக்கவும் உதவுகிறது. இது ஆஸ்பராகஸ், பசலைக் கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ், கருஞ்சீரகம் ஆகியவற்றில் எதில் கிடைக்கிறது.

வைட்டமின் பி12 (கோபா லமின்): மெட்டபாலிசத்தை வேகப்படுத்துவதுடன், சரும செல்லை புதுப்பிக்கிறது.
இது முட்டை, கோழி, தயிர், பால், பயறு ஆகியவற்றில் எதில் கிடைக்கிறது.

Tags :
|