Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கோடை வெயிலை சமாளிக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும்.? மருத்துவர் அறிவுரை

கோடை வெயிலை சமாளிக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும்.? மருத்துவர் அறிவுரை

By: vaithegi Thu, 20 Apr 2023 3:46:58 PM

கோடை வெயிலை சமாளிக்க நாம்  என்னென்ன செய்ய வேண்டும்.? மருத்துவர் அறிவுரை

கோடை காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு, தனியார் நிறுவனங்களுக்கு என பல வலியுறுத்தல்களை வழங்கி கொண்டு வருகின்றனர். மதிய வேளையில் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் , வெயிலின் தாக்கத்தை கொண்டு வேலை நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் நிறுவனங்களுக்கும் அரசு வலியுறுத்தியுள்ளது.

வெயிலின் தாக்கத்தை தணிக்கவும், வெயிலின் பாதிப்பில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொற்று நோய் நிபுணரான சத்ரமௌலி பட்டாச்சார்யா மற்றும் குழந்தை நல மருத்துவர் அபுர்பா கோஷ் ஆகியோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த அறிவுரைகளை இங்கே பார்க்கலாம்

doctor,summer,advice ,மருத்துவர் ,கோடை

அதன்படி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? : - மருத்துவ காரண கட்டுப்பாடுகள் இல்லாத நபர்கள் சராசரியாக ஒவ்வொரு நாளும் 3 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இருப்பினும், வெளியில் அதிக நேரம் செலவிடுபவர்கள் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். உடல்நல பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் மருத்துவர் அனுமதிக்கும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். சராசரியாக, 20 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான குழந்தை 1 நாளைக்கு 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.குளிர்பானங்களை குடிப்பது நல்லதல்ல, ஏனெனில் அவைகளில் அதிக சர்க்கரை உள்ளதால் குறைவான அளவே நாம் அருந்துவோம். அது உடலில் நீர் இழப்பை நிரப்ப உதவாது.

doctor,summer,advice ,மருத்துவர் ,கோடை

நடைப்பயிற்சி : - நாள் வெப்பநிலை உயரத் தொடங்கும் முன் காலை நடைப்பயிற்சியை முடித்து கொள்ள வேண்டும். ஆனால் இது சூரிய உதயத்திற்கு முன் செய்யப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. இருப்பினும், தற்போதைய நிலையில், காலை நடைப்பயிற்சி மிதமானதாக இருக்க வேண்டும், வழக்கத்தை விட குறைவான நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குடிநீர் கட்டுப்பாடுகள் உள்ளவர்கள் இக்கோடை காலத்தில் காலை நடைப்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

doctor,summer,advice ,மருத்துவர் ,கோடை

குழந்தைகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நீண்ட நேரம் வெளியில் இருக்கக் கூடாது, ஏனெனில் அப்போதுதான் வெப்பநிலை உச்சத்தில் இருக்கும். இது உடல் சோர்வு மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுத்தும். வெளியில் செல்லும் போது, குழந்தைகள் வெளிர் நிற காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். கருப்பு நிற மற்றும் பாலிஸ்டர் ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

வயதானவர்கள் நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகிய மருத்துவ கட்டுப்பாடுகள் கொண்ட குடும்ப உறுப்பினர் திரவக் கட்டுப்பாடு ஆலோசனையைப் பெற்றிருந்தால், அவற்றை கோடைகாலத்திற்கு ஏற்றவாறு மருத்துவரிடம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். குழப்பம், தலைச்சுற்றல், பலவீனம் அல்லது காய்ச்சல் புதிய ஆரம்ப அறிகுறிகள் இருந்தால், ஆரம்ப மருத்துவ ஆலோசனை மிக முக்கியம். முதியோர்கள், வெப்பச் சோர்வைத் தடுக்க, முடிந்தவரை குளிரூட்டப்பட்ட அறைகளில் தங்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

doctor,summer,advice ,மருத்துவர் ,கோடை

குளியல் முறை :- சாதாரண ஆரோக்கியமானவர்கள் உடலின் வெப்பநிலையை தணிக்க உதவுவதற்காக 1நாளைக்கு குறைந்தது 2 குளியல் என்பது பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளும் 1 நாளைக்கு 2 முறை குளிக்க வேண்டும் மற்றும் சோப்பை பயன்படுத்த வேண்டும், இது நவதுவாரங்களை சுத்தமாக வைத்திருக்கவும், உடல் அதிக வெப்பத்தை குறைக்கவும் உதவுகிறது.

Tags :
|
|