Advertisement

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்ன செய்யணும்!!!

By: Nagaraj Sun, 18 Sept 2022 4:39:50 PM

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்ன செய்யணும்!!!

சென்னை: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதில் செம்பில் செய்த பாத்திரத்தில் வைக்கும் தண்ணீருக்கு பெரும் பங்கு உண்டு.

உலகெங்கும் பொதுவான நோயாக இருப்பது நீரிழிவு நோய். இதனை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியால் கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரை நோயை நிர்வகிக்கும் திறன் தாமிர பாத்திர (செம்பு) தண்ணீருக்கு உண்டு என்று ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கிறது. அது எப்படி என்பதை பார்ப்போம்: பொதுவாக நமது உடலுக்கு செம்புச் சத்து தேவை.

copper vessel,water,sugar level,inflammation,physical injury ,செம்பு பாத்திரம், தண்ணீர், சர்க்கரை அளவு, வீக்கம், உடல் காயம்

நம் உடலால் தானே செம்புச் சத்தை உற்பத்தி செய்து கொள்ள முடியாது. இதனால் செம்பு பாத்திரத்தில் சமைத்தோ, அதில் நீர் அருந்தியோ செம்பு சத்து தேவையை பூர்த்தி செய்யலாம். ஊட்டச் சத்துக்களை அப்படியே உள்வாங்க வைக்கும் திறன் இதற்கு உண்டு.

செம்பு தண்ணீர் குடிக்கும்போது, உடலில் 50க்கும் மேற்பட்ட
என்ஸைம்களின் வேலைகள் சீராகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதில் இந்த செம்பு தண்ணீருக்கு பெரும் பங்கு உண்டு. செம்பு தண்ணீரில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் சர்க்கரை நோயாளிகளின் உடலில் காயம் மற்றும் வீக்கத்தை சரிசெய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இரவு தூங்கும்முன் ஒரு டம்ளர் தண்ணீரை செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து காலை எழுந்ததும், வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை அளவு குறையும்.

Tags :
|