Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்த கோதுமை

புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்த கோதுமை

By: Nagaraj Thu, 29 Dec 2022 10:28:51 PM

புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்த கோதுமை

சென்னை: கோதுமை முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்று. இது உலகம் முழுதும் பயிரிடப்படுகிறது. இது ஒரு புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். இது உலகில் அதிகம் பயிரிடப்படும் உணவு தானியங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கோதுமை உணவாகவும், அறுவடைக்குப்பின் கழிக்கப்பட்ட தாவர மிச்சங்கள் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. உலகம் முழுவதும் பல விதமான கோதுமை இரகங்கள் விளைவிக்கப்படுகின்றன.

கோதுமையில் வெண்கோதுமை, செங்கோதுமை இரு முக்கியமான வகைகளாகும். ஆனால், வேறு பல இயற்கையான வகைகளும் உள்ளன. உதாரணமாக, எத்தியோப்பிய நிலங்களில் விளையும் ஊதா நிற கோதுமையைக் குறிப்பிடலாம். மேலும் கறுப்பு, மஞ்சள் மற்றும் நீலக் கோதுமை போன்ற கோதுமை வகைகளும் உள்ளன.

இந்தியாவில் கோதுமை பஞ்சாபில் தான் அதிகம் பயன்படுத்தபடுகிறது. இதுதான் பஞ்சாப் மக்களின் முக்கியமான உணவு.

wheat,goodness,protein,fat,mineral salts,fiber ,கோதுமை, நன்மை, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து

தற்போது தென்மாநில மக்களிடமும், கோதுமை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. கோதுமை என்பது அனைத்து காலத்திற்கும் ஏற்ற உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர் கட்டாயம் கண்டுகொள்ளவேண்டிய உணவுதான் கோதுமை.

கோதுமையை பயன்படுத்தி இனிப்பு, காரவகைகள், பொரித்த உணவுகள், கேக்குகள், பிஸ்கெட்டுகள் என்று ஏராளமானவை செய்யப்படுகிறது. கலோரிகளை பொறுத்தவரை அரிசியில் உள்ள அதே அளவுதான் கோதுமையிலும் உள்ளது.

கோதுமையில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜெரோட்மின், தயாமின், ரிபோஃப்ளோவின், நயாசின், ஃபோலிக் ஆசிட், காப்பர், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம், சல்ஃபர், குரோமியம் போன்றவை உள்ளது. இப்படி எல்லா சத்துகளும் கோதுமையில் அதிகம் நிறைந்துள்ளது.

Tags :
|
|