Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • எது அசல் தேன்? எது கலப்பட தேன் என அறிந்து கொள்வது எப்படி ?

எது அசல் தேன்? எது கலப்பட தேன் என அறிந்து கொள்வது எப்படி ?

By: Karunakaran Mon, 14 Dec 2020 3:40:32 PM

எது அசல் தேன்? எது கலப்பட தேன் என அறிந்து கொள்வது எப்படி ?

தேன் என்றாலே நாவில் எச்சில் ஊறும். ஆம், அந்த எச்சில் முறையாக ஊறினாலே உடல் நலமாக இருக்கிறது என்று அர்த்தம். எது அசல் தேன்? எது கலப்பட தேன் என்பது பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது. ஏனெனில் நமது ஆரோக்கிய உணவுகளில் தேனும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சுத்தமான தேனை மட்டுமே நமது உடலுக்கு நல்லது.

ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள். அந்த தேனை, தேன் ஊற்றப்பட்ட காகிதம் உறிஞ்சாமலும் மேற்கொண்டு அந்த வெள்ளைத்தாளில் பரவாமலும் இருந்தால் அது அசல் தேன் என்பதை அறியலாம். ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்லது பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறியலாம்

original honey,mixed honey,test,health food ,அசல் தேன், கலப்பு தேன், சோதனை, சுகாதார உணவு

ஒரு டம்ளர் நிறைய தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒருதுளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன், தண்ணீரோடு கரையாமல் நேராக கீழே சென்று விழுந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம். ஒருவேளை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்துவிட்டால், அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.

ஒரு தீக்குச்சியின் மருந்து பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியை, தீப்பெட்டியின் பக்கவாட்டில் உள்ள மருந்து பட்டையில் உரசுங்கள், உடனே தீப்பற்றி எரிந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம். ஒருவேளை அந்த தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்பட தேன் என்பதை அறியலாம்.

Tags :
|