Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம்!!!

சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம்!!!

By: Nagaraj Sun, 07 May 2023 12:29:10 PM

சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம்!!!

சென்னை: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பிஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் தினமும் மாலையில் ஒரு கப் சுண்டல் சாப்பிடுவது நல்லது. அதோடு அடிக்கடி இடையில் பசி எடுத்தால் பாதாம், அக்ரூட் ஆகியவற்றை சாப்பிடலாம்.
சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய கீரை வகைகள் அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொரியலாகவோ அல்லது ஏதேனும் ஒருவகையில் தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதன் மூலம் அவர்களின் உடலிற்கு தேவையான சத்து கிடைப்பதோடு சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்.
சக்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்: பொதுவாக சக்கரை நோயாளிகள் எந்த பழ வகையையும் சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் சக்கரையின் அளவு அதிகரிக்கும் என்றொரு கருத்து உண்டு. ஆனால் சக்கரை நோயாளிகள் சில பழவகைகளை சாப்பிடலாம். அப்படி அவர்கள் சாப்பிட வேண்டிய சில பழ வகைகள் இதோ.

நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம். தினம் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிடலாம். கொய்யா காய் சாப்பிடலாம். பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சாப்பிடலாம். மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே ஒருநாளைக்கு சாப்பிடலாம். ஒரே நாளில் அனைத்து பழ வகைகளையும் சாப்பிட கூடாது.

or diabetics,musumusukai spinach,vallarai spinach,ponnankanni spinach,moringa spinach ,சர்க்கரை நோயாளிகள், முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை

கோதுமை நார் சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரு தானியம் ஆகும். இதை கொண்டு செய்யப்படும் உணவுகளை தினமும் இரு வேளை அல்லது ஒரு வேளையாவது நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் உண்ண வேண்டும்.

ஆனால் பாக்கெட்டில் வரும் கோதுமை மாவை கொண்டு எந்த உணவையும் சாப்பிட வேண்டாம். ஏன் என்றால் சர்க்கரை நோயை அதிகரிக்கும் சில பொருட்கள் பாக்கெட் கோதுமை மாவில் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகையால் நீங்களே கோதுமையை கடையில் வாங்கி அரைத்து அதில் உணவு சமைத்து சாப்பிடுவது நல்லது.

Tags :