Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சளியை போக்கும் தன்மை கொண்ட வெள்ளை மிளகு… அதிக நன்மைகள் கொண்டது

சளியை போக்கும் தன்மை கொண்ட வெள்ளை மிளகு… அதிக நன்மைகள் கொண்டது

By: Nagaraj Mon, 13 Nov 2023 11:25:10 AM

சளியை போக்கும் தன்மை கொண்ட வெள்ளை மிளகு… அதிக நன்மைகள் கொண்டது

சென்னை: செரிமான பிரச்சினைகள், பல் பிரச்சினைகள் , எடை குறைப்பு போன்றவை முதல் தலைவலி, சளி மற்றும் இருமல் ஆகியவற்றைக் கூட குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. நிஃகிராம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மிளகு படர்கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலை வெற்றிலை போன்ற வடிவத்தில் இருக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் காயை மிளகு என்றும் ஆங்கிலத்தில் பெப்பர் என்றும் அழைக்கின்றனர்.

இந்த மிளகினை நிறத்தின் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. மிளகின் காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். அதை உலர வைத்தால் கிடைப்பதே பச்சை மிளகு என்று அழைக்கப்படுகிறது. பழுத்த மிளகினைப் பறித்து உலர வைத்தால் கிடைப்பதை கருமிளகு அல்லது குறுமிளகு என்று அழைக்கிறோம். பழுத்த மிளகின் தோல் பகுதி நீக்கப்பட்டு உலர வைக்கிறபோது கிடைப்பது வெண்மிளகு என்று அழைக்கப்படுகிறது.

பழுக்காத மிளகுக் காய்களிலிருந்தும் வெண்மிளகு தயார் செய்யப்படுகிறது. வெள்ளை மிளகு பொதுவாக மேற்பூச்சு மருந்துக்கு அதிகளவில் பயன்படுகின்றன. கருமை நிற மிளகு உணவுக்கும், மருந்துக்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

body weight,white pepper,skin cells,eyesight,important ,உடல் எடை, வெள்ளை மிளகு, சரும செல்கள், கண்பார்வை, முக்கியம்

உடல் எடை: வெள்ளை மிளகில் கேப்சைசின் உள்ளது. இது உடல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதனால் பெரும்பாலான எடை குறைப்பு மருந்துகளில் இந்த வெள்ளை மிளகு பயன்படுத்தப்படுகிறது. மேலும் உங்கள் உணவில் சிறிதளவு வெள்ளை மிளகு சேர்ப்பது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இருமல்: வெள்ளை மிளகு மசாலா சூட்டை உருவாக்க கூடியது. இந்த மிளகினால் உண்டாகும் சூடு தொண்டை வலியை கட்டுப்படுத்துகிறது. இந்த மிளகினை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஒரு ஆண்டிபயாடிக் மருந்தாக செயல்பட்டு தொண்டை நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது. இதனால் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கண்பார்வை மேம்படுத்துகிறது: கண்பார்வை மேம்படுத்த பயன்படுத்தும் பொருள் வெள்ளை மிளகு. இது பெரும்பாலான பாட்டிகளின் சமையல் குறிப்புகளில் உள்ள மிக முக்கியமான பொருளாகும். இதில் இருக்கும் அதிக சூட்டை கட்டுப்படுத்த பாதாம் தூள், சோம்பு மற்றும் சர்க்கரை பயன்படுத்தலாம்

Tags :