Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகும் வெண்பூசணி!

உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகும் வெண்பூசணி!

By: Monisha Tue, 02 June 2020 11:57:09 AM

உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகும் வெண்பூசணி!

வெண்பூசணி சாறு உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்துகிறது. இந்த வெண்பூசணி சாறு தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்: பூசணிக்காய் - அரை கிலோ, தேன் - 2 தேக்கரண்டி, தண்ணீர் - தேவைக்கு ஏற்ப.

செய்முறை: வெண்பூசணியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டவும்.

வடி கட்டி எடுத்த வெண்பூசணியுடன் 2ஸ்பூன் தேன் கலந்து பருகினால் உடல் எடை குறையும். பூசணிக்காயில் கொழுப்பு சத்து மிக குறைவாக இருப்பதினால் நீரழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.

உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

white pumpkin,weight loss,diabetes,water content ,வெண்பூசணி,உடல் எடை குறைய,நீரழிவு நோயாளிகள்,நீர்ச்சத்து

வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு மிகவும் நல்லது.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் முழுமையாக குணமாகும்.

Tags :