Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?

ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?

By: Monisha Mon, 27 July 2020 3:56:23 PM

ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?

வயது கூடும்பொழுதும், முதியோருக்கும் ரத்த அழுத்தம் மாறுபடும். இதற்கு ரத்த நாளங்களின் முதிர்வே காரணமாகின்றது. ஒருவரின் உடற்பயிற்சி, தூக்கம், ஜீரணசக்தி, மனநிலை இவையும் ரத்த அழுத்த மாறுபாடுகளுக்கு காரணம் ஆகின்றது.

உயர் ரத்த அழுத்தம் உடலிலுள்ள சில பாதிப்புகளை குறித்தும் இருக்கலாம். சில நேரங்களில் உயர் ரத்த அழுத்தம் அவசர சிகிச்சையில் கொண்டும் விடலாம். தொடர் உயர் ரத்த அழுத்தம் ரத்தக் குழாய்களில் அதிக அழுத்தத்தினை அளிப்பதால் இருதயத்திற்கு அதிக வேலை ஆகின்றது. இருதய ரத்தக் குழாய்களில் தேவையற்ற உள் திசு வளர்ச்சி ஏற்பட்டு ரத்த ஓட்டம் சுருங்குகின்றது.

இதனால் இருதய தசைகள் தடித்து பலவீனம் அடைகின்றன. இதுவே இருதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, ரத்த குழாய்கள் பாதிப்பு என ஏற்படுத்துகின்றன. முறையான சிகிச்சை, உயர் ரத்த அழுத்தத்திற்கு அளிக்காவிடில் ஆபத்திலேயே கொண்டு விடுகின்றது.

high blood pressure,blood flow,heart,test,tension ,உயர் ரத்த அழுத்தம்,ரத்த ஓட்டம்,இதயம்,பரிசோதனை,டென்ஷன்

சிலருக்கு கர்ப்ப காலத்தில் குறைந்த ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், மயக்கம், அதிர்ச்சி நிலை போன்றவற்றினை ஏற்படுத்தக்கூடும். இது அதிக ரத்தப்போக்கு, நச்சு மருந்தினால் கூட இருக்கலாம். ஹார்மோன் சரியின்மை, மிகக் குறைவான உணவு இவற்றினாலும் மேலும் சில மருத்துவ காரணங்களினாலும் ஏற்படுகின்றது.

ரத்த அழுத்தத்தினை பரிசோதிக்கும் பொழுது அதற்கு முன் சுமார் 20 நிமிடங்களுக்கு முன்பு காபி அருந்தியோ, புகை பிடித்தோ இருக்கக்கூடாது. சிறுநீர் செல்லவேண்டிய அவசரம் இருக்கக்கூடாது. பரிசோதனைக்கு 5 நிமிடம் முன்பு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து இரு கால்களும் தரையில் பட இருக்கவேண்டும்.

ரத்த அழுத்தம் அவ்வப்போது மாறுபடும் என்பதால் நம் ரத்த அழுத்த அளவினை உறுதி செய்ய காலை தூங்கி எழுந்தவுடன் (அதாவது எந்த வேலையும் ஆரம்பிக்கும் முன்) எடுக்க வேண்டும். வேலைகள் முடிந்த பிறகும் எடுக்கலாம். சிலருக்கு ரத்த அழுத்த பரிசோதனையே சற்று டென்ஷன் கொடுப்பதால் லேசான உயர் அழுத்தத்தினைக் காட்டலாம். இருதய வால்வு பிரச்சனை, இருதய துடிப்பு கம்மியாகுதல், இருதய பாதிப்பு, இருதய துடிப்பு குறைவு போன்றவைகளால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

Tags :
|
|