Advertisement

குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது வில்வ பழம்

By: Nagaraj Sun, 11 June 2023 9:55:02 PM

குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது வில்வ பழம்

சென்னை: குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். இது நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க உதவி, குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.

சிலருக்கு எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு, வில்வ பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் விதை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து வில்வ பழத்தை நன்றாக மிக்ஸியில் அரைத்து சர்பத் தயார் செய்து கொள்ளவேண்டும்.

இந்த சர்ப்பத்தினை அருந்திவர குடல் சுத்தமாகி உடம்புக்கு ஊட்டம் கொடுத்து மலச்சிக்கலையும் போக்கும். சீதபேதியையும் குணமாக்கும் சக்தி இதற்கு உண்டு. சிலருக்கு சளி தொல்லை அடிக்கடி இருக்கும். அவ்வாறு உள்ளவர்கள் வில்வ பழத்தினை ஜூஸ் தயாரித்து காலை மற்றும் மாலை எடுத்துக்கொண்டால் சளி தொல்லை நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

willow fruit,native sugar,stomach problems,heart,health ,வில்வ பழம், நாட்டுசர்க்கரை, வயிற்று பிரச்சினை, இதயம், ஆரோக்கியம்

இதயத்தை பாதுகாக்கும் உணவுகளில் வில்வப் பழமும் ஒன்று. வில்வ பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை ஆரோக்கியமாக பாது காக்கிறது. இதயம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மால் நீண்ட நாள்கள் வாழ முடியும்.

சிலருக்கு திடீரென வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும். அந்த சமயத்தில் வில்வ பழத்தோடு நாட்டு சக்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸாக அருந்தி வந்தால் வயிற்றுப் பிரச்சனையை தீர்க்கும்.

Tags :
|