Advertisement

உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் தயிர் உணவுகள்

By: Nagaraj Tue, 11 Oct 2022 11:27:57 AM

உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் தயிர் உணவுகள்

சென்னை: 100 கிராம் தயிரில் 98 கலோரிகள் உள்ளன. இந்த ஆரோக்கிய உணவின் பயன்களை தெரிந்து கொள்வோம்.
ப்ரோபையோட்டிக் என்பது ஒரு நுண்ணுயிர். அது உணவு செரிமானத்திற்கு துணை புரியும். இந்த நுண்ணுயிர் தயிரில் அதிகம் இருப்பதால் நாம் தயிர் உட்கொள்ளும்போது செரிமானப் பகுதியில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்கள் வளர துணை புரிகின்றது.


வயிற்று வலி, வீக்கம், வயிற்று பிடிப்பு,குடல் நோய் போன்றவைகள் வராமல் இந்த ப்ரோபையோடிக்ஸ்கள் பாதுகாக்கின்றன. மற்ற உணவுப்பொருட்களில் இந்த ப்ரோபையோடிக்ஸ்கள் இருந்தாலும், தயிர் போன்ற உணவில் இருப்பதை உடல் அதிகமாக உறிஞ்சி கொள்கின்றது.

பால் அருந்தினால் சிலருக்கு எளிதில் செரிமானம் அடைவதில்லை என்று கூறுவர் . அதற்கு காரணம் பாலில் அதிகமான லாக்டோஸ் இருப்பது. அப்படிப்பட்டவர்கள் பாலுக்கு பதில் தயிர் சேர்த்துக் கொள்வதால் அந்த லாக்டோஸ் லாக்டிக் அமிலமாக மாறி எளிதில் செரிமானம் ஆகிறது. அதோடு பாலின் மற்ற சத்துகளும் அப்படியே கிடைக்கிறது.

yogurt,phosphorus,bone,health,infections ,தயிர், பாஸ்போரோஸ், எலும்பு, உடல் நலன், தொற்றுகள்

கார்டிசோல் என்ற ஹார்மோன் கொழுப்பு செல்களை தூண்டி வயிற்று பகுதியை சுற்றி கொழுப்பு உருவாக்கத்தை ஏற்படுத்துகிறது.உடலில் கால்சியம் சத்து இருந்தால் அது இந்த கார்டிசோல் ஹோர்மோன் சுரப்பதை தடுத்து வயிற்று பகுதியில் கொழுப்பு சேருவதை குறைக்கும். தயிரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. தினமும் 1 கப் தயிர் சாப்பிடுவதால் இந்த கொழுப்பு சேருவதை தவிர்க்க முடியும்.


இதனால் நமது உடலமைப்பு சீராக இருக்கும். தயிர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் கிருமிகளுடன் போராடி உடலை சீரமைக்கிறது. இதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது. யோனி பகுதியைச் சுற்றியுள்ள ஈஸ்ட் தொற்றுகளைத் தடுப்பதற்கு உங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது.

தயிரில் பாஸ்போரோஸ் அதிகமாக உள்ளது. இது எலும்பு வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் ஆர்த்ரிடிஸ் , ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை தடுக்கப் படுகின்றன.

Tags :
|
|
|