Advertisement

இரைப்பை குடல் நோய்களை தடுக்க உதவும் தயிர்

By: Nagaraj Thu, 15 Dec 2022 11:32:11 PM

இரைப்பை குடல் நோய்களை தடுக்க உதவும் தயிர்

சென்னை: மழை காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி, அஜீரணத்தை ஏற்படுத்திவிடும் என்று பலரும் நம்புகிறார்கள். மேலும் மழைக்காலத்தில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, காரமான உணவுகளின் மீது இயல்பாகவே நாட்டம் உண்டாகிவிடும். தயிரை அதிக குளிர்ச்சிக்கு ஆளாக்காமல் அறையின் வெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது.


அப்படி அறை வெப்பநிலையில் வைக்கப்படும் தயிரை உணவில் கலந்து சாப்பிடுவது சரியானது. அதிலிருக்கும் புரோபயாடிக் பண்புகள், இரைப்பை குடல் நோய்களை தடுக்க உதவும்.

பாலை விட தயிரில் இருக்கும் புரதம் எளிதில் செரிமானம் ஆவதற்கு துணை புரியும். மேலும் தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் செரிமான செயல்முறையை எளிதாக்கும். இரவிலோ அல்லது தூங்கச் செல்லும் முன்பாகவோ தயிர் சாப்பிடும்போது அதிலிருக்கும் டிரிப்டோபான் எனப்படும் சேர்மம் உடலுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. இது தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

curd,eat,health,monsoon,rainy-season, ,
தயிர், மழை காலம்

தயிரில் உள்ளடங்கி இருக்கும் பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிமைப்படுத்தும். மேலும் தயிரில் உள்ள புரோபயாடிக் பண்புகள் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றை தடுக்க உதவும். தாய்க்கோ அல்லது குழந்தைகோ, சளி, இருமலை ஏற்படுத்தாது.

கொழுப்பின் தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில் டோன்ட் மற்றும் ஸ்கிம்டு மில்க் தயிர் கடைகளில் விற்கப்படுகிறது. கொழுப்பைத் தவிர, கால்சியம், வைட்டமின் டி, பொட்டாசியம் மற்றும் புரதம் ஆகியவையும் தயிரில் நிரம்பியுள்ளது. மேலும் உடலில் கால்சியம் உறிஞ்சுதலுக்கும் தயிர் உதவுகிறது.


தயிர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது மற்றும் வீக்கத்தைத் தடுக்கிறது. எனவே, குழந்தைகளை தயிர் சாப்பிட ஊக்குவிக்க வேண்டும். மேலும் அவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடுவது சிறப்பானது.

Tags :
|
|
|