Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உடல் எடையை குறைக்கலாம்

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உடல் எடையை குறைக்கலாம்

By: Nagaraj Sun, 12 Mar 2023 9:52:40 PM

வீட்டில் உள்ள  பொருட்களை வைத்தே உடல் எடையை குறைக்கலாம்

சென்னை: பரபரப்பான வாழ்க்கை சூழலின் காரணமாக, நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் சிறிதும் அக்கறை செலுத்துவதில்லை.

தவறான வாழ்க்கை முறை தேர்வுகள், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து விடுகிறது.

கொழுப்பு நிறைந்த உணவுகள், புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் ஆகியவை தான் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற ஒரு பொருளாகும், இது நரம்புகளில் குவிந்து, இதன் காரணமாக இரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்குகின்றன. கொலஸ்ட்ரால் படிவத்தின் காரணமாக இதயம் தொடர்பான பலவித நோய்கள் உங்களை பாதிக்கும்.

bad cholesterol,blood vessels,hot water,water , இரத்த நாளங்கள், கெட்ட கொலஸ்ட்ரால், சூடான நீர், தண்ணீர்

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் மற்றும் இரத்தம் சரியாக இதயத்திற்குச் செல்லாதபோது மாரடைப்பு ஏற்படலாம். வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். கொலஸ்ட்ராலை குறைக்க மருத்துவரிடம் சென்று பரிசோதித்து மருந்துகளை உட்கொள்ளலாம் மற்றும் எளிமையான வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே உடல் எடையை குறைக்கலாம்.

அனைவரது வீடுகளிலும் எளிதாக கிடைக்கக்கூடிய தண்ணீரை வைத்தே கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும். தண்ணீரை சுட வைத்து வெந்நீராக அருந்துவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு சேர்வதால் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது,

இந்த பிரச்சனைக்கு வெந்நீர் குடிப்பது மிகவும் பயனுள்ள தீர்வாகும். தொடர்ந்து சூடான நீரை உட்கொள்வது லிப்பிட் ப்ரோபைலை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் தமனிகளில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது.

Tags :