Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

By: Nagaraj Tue, 24 Jan 2023 10:41:32 PM

வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

சென்னை: வாய் துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் முகம் கொடுத்து கதைப்பதற்கு பெரிதும் கஷ்டப்படுகின்றீர்களா? அல்லது நீங்கள் பேசும் போது அவர்கள் முகத்தை திருப்பிக் கொள்வதால் நீங்கள் அவமானமடைந்தது போல உணர்கின்றீர்களா? கவலையை விடுங்கள். நீங்கள் மற்றவர்களிடம் மனம் விரும்பியது போல முகம் பார்த்து கதைப்பதற்கும், அவர்கள் உங்கள் பேச்சை தாராளமாக கேட்டு ரசிப்பதற்குமான காலம் வெகு தொலைவில் இல்லை.
அதற்கு முதலில் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வயிற்றில் ஏற்படும் புண்கள் தான் அதற்கு முதலாவது காரணமாக விளங்குகின்றது. ஆமாம் அல்சர் எனப்படும் இவ்வயிற்றுப் புண்களால் வயிற்றில் உருவாகும் நாற்றத்தன்மை வாய் வழியாக வெளியேறும் போது தான் வாய் துர்நாற்றம் அதிகம் ஏற்படுகின்றது.

bad breath,throat,tobacco,tonsils ,வாய் துர்நாற்றம், தொண்டை, புகையிலை, டான்சில்

அத்துடன் கீழ் வரும் சில விடயங்களும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.உடம்பில் நீர்ச்சத்து குறைந்து போகின்றமை. புகையிலை, வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வாயிற்குள் போட்டு மெல்லுதல்.

புகைக்கும் பழக்கம், போதைப் பொருட்களை சாப்பிடுதல். தொண்டையில் உள்ள டான்சில் எனப்படும் சுரப்பியல் தொற்று ஏற்படுதல். இவ்வாறு தொண்டையில் உருவாகும் கிருமித் தொற்றும் வாய் துர்நாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைகின்றது.

Tags :
|